Cinema News
இந்தப் படங்கள் எல்லாம் இவரின் ஒளிப்பதிவில் வெளிவந்த படங்களா?.. பிரபல நடிகரின் மறுபக்கம்!..
தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவையில் அவ்வப்போது முகம் காட்டி வருபவராகவும் இருப்பவர் நடிகர் இளவரசு. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்த இவர் முதன் முதலில் பாரதிராஜாவால் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
1987 ஆம் ஆண்டு வெளியான ‘வேதம் புதிதி’ என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார் இளவரசு. இந்தப் படத்தை இயக்கியவர் பாரதிராஜா. அதனை தொடர்ந்து பல படங்களில் தோன்றிய இளவரசு தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக அறியப்பட்டார்.
கிராமத்து மண்வாசனையுடன் பேசும் இவரின் வசனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவர் ஒர் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகமிகச் சிறந்த நடிகர் என்பதை ‘முத்துக்கு முத்தாக’ படம் உணர்த்தியது. அதில் ஐந்து பிள்ளைகளுக்கு அப்பாவாக தன் கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார் இளவரசு.
தன் ஆண் பிள்ளைகள் வீட்டில் சந்தோஷமாக சில நாழிகை இருந்து விட்டு வரலாம் என்று நினைத்தாலும் வந்த மருமகள்களால் தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை நன்கு உணர்ந்து பிள்ளைகளுக்காக பொறுத்துப் போகும் அப்பாவாக அனைவரையும் மனம் உருக வைத்திருப்பார்.
தன் கணவன் அவமானப்படுவதை தாங்க முடியாமல் தவிக்கும் மனைவியாக சரண்யா பொன்வன்னன் நடித்திருப்பார். கடைசியாக நாம் யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது என்பதற்காக கணவனுக்கு தெரியாமலேயே சுவையான கரிக் குழம்பு வைத்து அதில் கொஞ்சம் விஷத்தையும் கலந்து தன் கணவனுக்கு கொடுத்து தானும் அதை உண்டு இறுதியில் இருவரும் உயிரை விடும் சம்பவம் அனைவரையும் திக்குமுக்காட வைத்தது.
அந்தக் காட்சிகளில் இருவரும் அற்புதமாக நடித்திருப்பார்கள். இளவரசு நல்ல நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இருந்து வருகிறார். இவரின் ஒளிப்பதிவில் பல நல்ல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. பிரபுவின் நடிப்பில் வெளிவந்த ‘பாஞ்சாலக்குறிச்சி’ மற்றும் ‘பெரியதம்பி’, விஜயின் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான ‘ நினைத்தேன் வந்தாய்’, ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘மனம் விரும்புதே உன்னை’ போன்ற படஙகள் எல்லாம் இளவரசு ஒளிப்பதிவில் வெளிவந்த படங்களாகும். மேலும் இவரை முதன் முதலில் ஒளிப்பதிவாளராக்கிய பெருமை சீமானையே சேரும்.
இதையும் படிங்க : மருத்துவமனையில் இருந்தபடியே ட்யூன் போட்ட இளையராஜா!.. என்ன பாடல் தெரியுமா?..