Connect with us
jai

Cinema History

அடிவாங்கும் காட்சியில் நான் நடிப்பதா? வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த அந்த நடிகர் யார் தெரியுமா?

Actor Jaggaya: சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிப்பிற்காக எதையும் செய்ய துணியும் நடிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நடிப்பதற்காக வந்து விட்டால் வேறெந்த கண்டீசனும் போடாமல் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திறம்பட நடித்து விடுகின்றனர்.

ஆனால் இந்த நடிகர் யாரிடமும் அடிவாங்காமல் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர் போலும். அதனால் நான் அடிவாங்கி நடிக்கும் சீனில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் ஜக்கையாவாம்.

இதையும் படிங்க: வாலியை கொசு என எழுதிய பத்திரிக்கையாளர்!. அவரிடம் வாலி சொன்ன கமெண்ட்டுதான் ஹைலைட்!..

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தமிழில் வெளியான படம்தான் ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி’. இந்தப் படம் தமிழில் சக்க போடு போட்டது. இதை அப்படியே தெலுங்கில் எடுக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனரான எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டார்.

தெலுங்கில் அந்தப் படத்தில் தெலுங்கு உலகில் சிறந்து விளங்கிய நடிகரான ஜக்கையாவை நடிக்க வைத்தார் எஸ்.எஸ். வாசன். தெலுங்கில் அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் ஒரு விபரீதம் ஏற்பட்டது. கதைப்படி அரசரிடம் ஜக்கையா அடி வாங்கி நடிக்கும் படியான காட்சியாம்.

இதையும் படிங்க: நடிகையின் மீது தீவிர காதல் கொண்ட ரஜினிகாந்த்…! அம்மா பேச்சை கேட்டு அமைதியான பின்னணி…

ஆனால் இந்த மாதிரி காட்சியில் எல்லாம் என்னால் நடிக்க முடியாது. அப்படியே நடித்தாலும் தெலுங்கில் என் மார்கெட் குறைந்து விடும். என் மீதுள்ள மரியாதையும் போய்விடும் என்று கூறி அட்வான்ஸை திருப்பி கொடுக்க முயன்றாராம் ஜக்கையா.

இந்த விஷயம் எஸ்.எஸ்.வாசனுக்கு தெரியவர உடனே படக்குழுவினரிடம் வாசன் ‘ஒரு மணி நேரம் அந்தப் படத்தில் ஜக்கையா இல்லாத காட்சியை எடுங்கள். அதன் பிறகு ஒரு முடிவை சொல்கிறேன்’ என கூறியிருக்கிறார். வாசன் கூறிய படியே ஜக்கையா இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததாம்.

jaggaya

jaggaya

இதையும் படிங்க: ஏகப்பட்ட யூகங்கள்… போட்டி போட்டுக்கொள்ளும் முன்னணி இயக்குனர்கள்… யார் அந்த தளபதி69 இயக்குனர்?

சரியாக ஒரு மணி நேரம் கழித்து வாசன் ஜக்கையாவிற்கு பதிலாக தெலுங்கு நடிகர் காந்தராவை அழைத்து வந்து அந்தப் படத்தில் நடிக்க வைத்தாராம். இப்படித்தான் தெலுங்கில் அந்தப் படம் படமாக்கப்பட்டதாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top