விஜய் நடித்த பகவதி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் ஜெய். சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் ,ராஜா ராணிஎன பலவெற்றிப்படங்களை கொடுத்தவ்ர் இவர்.கடந்த சில வருடங்களாக வெற்றிக்காக போராடி வருகிறார். ஜெய் நடிப்பில் அடுத்து சட்டென்று மாறுது வானிலை ரிலீஸீற்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், ஜெய் பிறந்த நாளையொட்டி இன்று அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அவர் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஒர்க்கர்’ (Worker) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அ வெளியிடப்பட்டுள்ளது.
கன்னடத்தில் வெளியான ‘சீசர்’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் வினய் கிருஷ்ணா ஒர்க்கர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக, கன்னட திரையுலகில் பிரபலமான இளம் நடிகை ரீஷ்மா நனையா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு, நாகிநீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.





