
Cinema News
நடித்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட்…! ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்…
நடிகர் ஜெய் நடிப்பில் சூப்பர் மேனாக உருவாகும் படம் தான் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் நடிகர் ஜெய் அவர்கள் ஒரு விமானத்தின் மேல் வில்லன்களோடு சேர்ந்து சண்டை போடுவது மாதிரியான காட்சிகள் இடம் பெறுகின்றன. இதற்காக சென்னை புறநகரில் பழைய சரக்கு விமானத்தில் செட் போட்டு படத்தின் காட்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்த படத்தில் கலை இயக்குனர் கோலிசோடா படத்தில் பணிபுரிந்த மகேஷ் செட் போட தீர்மானித்துள்ளார். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்ரூ பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாக மாற்றியுள்ளோம்.
இதையும் படிங்கள் : தள்ளி நின்னு ஆடும்மா…க்ளோசப்ல காட்டுனா ஜெர்க் ஆவுதுல்ல!…ஷாலு ஷம்முவின் ஹாட் வீடியோ…
உட்புறம் முழுவதுமாக மாற்றியுள்ளோம் வெளிப்புறம் கொஞ்சமாக மாற்றியுள்ளோம். படத்தின் காட்சி 2025 ஆம் ஆண்டை அடிப்படையாக அமைவதால் அதற்கேற்றாற் போல விமானத்தின் வெளிபாகங்கள் விஷுவல் அடிப்படையாக வைத்து மாற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இந்த படத்தில் சண்டைக் காட்சிகளில் நடிகர் ஜெய் டூப் போடாமல் நடித்துள்ளார். மேலும் இது குறித்து ஜெய் கூறுகையில் இது போன்ற சண்டை காட்சிகளை நான் பார்த்ததில்லை. நான் இது போன்ற சண்டை காட்சிகளிலும் நடித்ததில்லை. இதுதான் என் முதல் அனுபவம் எனக் கூறியுள்ளார்.