Cinema News
சிவாஜிக்கு வாக்கு கொடுத்த ஜெய்சங்கர்!.. கடைசி வரை செய்ய முடியலையே!…
இரவும் பகலும் என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் ஜெய் சங்கர். ரசிகர்கள் மனதில் சிவாஜி போல தானும் ஒரு பெரிய நடிகர் என்கிற இமேஜை உருவாக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் ஜெய்சங்கருக்கு எப்போதும் இருந்தது இல்லை. ஜெய்சங்கர் கடைசிவரை ஒரு தொழில்முறை நடிகராகவே இருந்தார்.
நாம் நடிக்கும் படம் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்கமாக இருந்தது. எனவே, தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். ஒரு தயாரிப்பாளர் படமெடுக்க ஆசைப்படுகிறார். ஆனால், அவரிடம் பணம் இல்லை என்றால் ஜெய்சங்கரே நடிகர், நடிகைகளிடம் பேசுவார்.
இதையும் படிங்க: ‘ஆசை’ படத்தில் எங்களால் அவமானப்பட்ட அஜித்! செய்த தவறை எண்ணி வருத்தப்படும் இயக்குனர்
அட்வான்ஸ் மட்டும் கொஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள். படம் முடிந்து வியாபாரம் ஆனபிறகு மிச்சத்தை வாங்கி கொள்ளலாம் என சொல்லி எல்லோரிடமும் பேசுவார். எல்லோரையும் சம்மதிக்க வைத்து படத்தை துவங்க உதவி செய்வார். படம் முடிந்து வசூல் ஆன பின் தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கி கொடுப்பார்.
இதனாலேயே தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். அதனாலேயே அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போடுவார்கள். படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடமும் அன்பாக பேசுவார். குறிப்பாக ஜாலியாக இருப்பார். ஜெய்சங்கரின் இந்த குணம் நடிகர் சிவாஜிக்கும் மிகவும் பிடிக்கும். அதனால், ஜெய்சங்கர் மீது அவருக்கு மிகுந்த அன்பும் உண்டு.
இதையும் படிங்க: காஜி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டு!.. மிச்சம் வைக்காம மொத்த அழகையும் காட்டும் ஜான்வி…
எனவே, அன்பளிப்பு, குலமா குணமா, கீழ் வானம் சிவக்கும், உருவங்கள் மாறலாம் என பல திரைப்படங்களில் ஜெய்சங்கரை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தார். அதேபோல், நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவாஜி சில காரணங்களால் கோபமடைந்து அதிலிருந்து வெளியேறினார்.
அதன்பின் ஜெய்சங்கரிடம் ‘நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியில் நீ அமர்ந்து பார்த்து கொள்’ என சிவாஜி பலமுறை கேட்டிருக்கிறார். அதற்கு ஜெய்சங்கர் ‘எனக்கு சில பணிகளை முடிக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் முடித்துவிட்டு கண்டிப்பாக நீங்கள் சொல்வதை செய்கிறேன்’ என வாக்கு கொடுத்துள்ளார். ஆனால், கடைசிவரை அவர் அதை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஜித் படத்துக்கே ஐடியா கொடுத்த நடிகர் சிவா.. இந்த பட டயலாக்கை நோட் பண்ணிங்களா?