Connect with us

Cinema History

எனக்கு தான் நீங்க முதல் படம் பண்ணனும்… கதை எல்லாம் கேட்க மாட்டேன்…பிரபல நடிகரிடம் முன்பதிவு செய்த தயாரிப்பாளர்

தமிழ்சினிமாவில் ஒரு சூப்பரான இனனோசென்ட் ஹீரோ நடிகர் ஜெய். இவர் பசங்களுக்கும் சரி. கேர்ஸ்க்கும் சரி. ரொம்பவே பிடிச்ச ஹீரோ. இவரது டயலாக் டெலிவரி பக்காவா இருக்கும். இவர் சொல்ற குட்டி குட்டி டயலாக் எல்லாம் பார்க்கும்போது அவரு மேல பெரிய க்ரஷக் கொண்டு வரும்.

பார்க்கறதுக்கு விஜய் மாதிரியே இருப்பாரு. காமெடியில பட்டையைக் கிளப்புவாரு. காதல் காட்சியில நடிக்கும்போது இவரோட இன்னோசென்ட்டான நடிப்பு ரொம்பவே சூப்பரா இருக்கும். இனி அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

நடிகர் ஜெய் நடிகர், இசை அமைப்பாளர், கார் ரேசர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பகவதியில் ஆரம்பித்து பட்டாம்பூச்சி வரை நடிகர் ஜெய் ரசிகர்களைத் தனக்கே உரிய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர்.

நான் டென்த்தோட ஸ்டாப் பண்ணிட்டேன். ஸ்கூல்ல ரவுடி கலந்த இன்னோசென்ட். லாஸ்ட் பென்ச். பசங்களுக்கு ரவுடி. பொண்ணுங்களுக்கு இன்னோசென்ட் தான். இதுவரைக்கும் யாருமே எங்கிட்ட பிரபோஸ் பண்ணதே இல்ல. எனக்கே ஷாக். சும்மா ஃபேன்னுங்கறீங்க…கேர்ள்ஸ்ங்கறீங்க.

Actor jai

ஆரம்பத்துல பகவதி சூட்டிங் ஸ்பாட் ரொம்ப பரபரப்பாவே இருக்கும். எப்படா இந்தப்படம் முடியும்னு இருக்கும். மியூசிக்ல தான எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட். சுற்றி இருக்குறவங்களாம் ரொம்ப கிண்டல் பண்ணினதால நான் நடிச்சி ப்ரூவ் பண்ணிக் காட்டணும்னு தான் திரும்ப நடிச்சேன்.

அதுதான் சென்னை – 600 028. பொண்ணுங்களுக்கு எல்லாம் என்னோட கண்ணு ரொம்ப பிடிக்கும்னு சொல்வாங்க. கண்கள் இரண்டால் பாடலுக்கு அப்புறம் நிறைய பேரு சொன்னாங்க.

எல்லோரும் இன்ட்ரோ சாங்க பார்த்தா அப்படியே வியப்பா பார்ப்பாங்க. என்னோட இன்ட்ரோ சாங்க மட்டும் தான் அப்படியே சிரிச்சிக்கிட்டே பார்ப்பாங்க. ஹே வாரான்டா…என்ற பாடல். அந்த சாங் பர்ஸ்ட் இல்ல. அப்புறம் ரீரிக்கார்டிங் பண்ணும்போது நானும் பிரேம்ஜியும் சேர்ந்து இப்படி ஒரு சாங் இருந்தா பெட்டரா இருக்கும்னு தோணுச்சு.

அண்ணாமலை படத்தில் தேவா சாரோட வந்தேன்டா பால்காரன் சாங்கோட ரெக்கார்டிங் பண்ணும்போது நான் கூட இருந்தேன். ஹேன்னு வாய்ஸ்லாம் வச்சி பண்ணலாம்னு பிளான் பண்ணுனோம்.

vamanan

வாமணன் பர்ஸ்ட் ஒரு ஆக்ஷன் படமா சிட்டிய பேஸ் பண்ணி பண்ணுனோம். அது தான் எனக்கு முதல் ஆக்ஷன் படம். சந்தானம் எல்லாம் அப்போ எனக்கு ரொம்ப குளோஸா இருந்தாரு.

வீட்டுல பிரண்ட்ஸ் கூட எல்லாம் இருக்கும்போது காமெடியா, பஞ்ச் டயலாக்கா தான் போயிக்கிட்டு இருக்கும். இதுதான் ரோல். மதுரையில இருந்து வந்திருக்குற ஒரு பையன் ரோல்னு சொன்னவுடன டக்கு டக்குன்னு ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கா வந்துரும். சில டயலாக் ஸ்பாட்லயே வரும்.

Kangal irandal song

இப்படி பிரபோஸ் பண்ணினா இப்படி தான் லவ் பெயிலியர் ஆகும். அதனால பொண்ணுங்களுக்குப் பிடிச்ச மாதிரி பிரபோஸ் பண்ணுங்க.

எனக்கு வந்து டைரக்ட் பண்ண முடியும்னு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது வந்து எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தான். அவருகிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்துருக்கேன். கேப்பான்னு ஒரு படம் பண்ணும்போது டயலாக் கொடுப்பாரு. அதை எனக்கு ஏத்த மாதிரி மாத்தி ரெடி பண்ணும்போது அவரே ஒருநாள் சொன்னாரு.

ch 28

உனக்குள்ள பயங்கரமான ஒரு ஸ்க்ரீன் பிளே ஸ்டோரி ரைட்டர் இருக்காருன்னு சொன்னாரு. அதை நல்லா ஃபோக்கஸ் பண்ணி வெளியே கொண்டு வந்தா கரெக்டா இருக்கும். எனி டைம் நீங்க படத்தை டைரக்ட் பண்ணினாலும் பர்ஸ்ட் படம் எனக்குத் தான் பண்ணனும். உங்கக்கிட்ட கதை எல்லாம் எதுவுமே கேட்க மாட்டேன்.

நீங்க பண்றீங்கன்னா நான் ரெடி. அவ்ளோ கான்பிடன்டா ஒரு புரொடியூசரே வந்து சம்பந்தமே இல்லாம டைரக்ஷன பத்;தி நம்மக்கிட்ட பேசுறாருங்கற மாதிரி இருந்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top