மங்காத்தா படத்தில் அஜித் இல்லை!.. அது நான் பண்ன வேண்டிய படம்!.. புலம்பும் நடிகர்!...
Mankatha: அஜித்தின் திரை வாழ்வில் அவருக்கு மிகவும் முக்கிய படமாக அமைந்தது மங்காத்தா. இத்தனைக்கும் அந்த படத்தில் அஜித் நெகட்டிவ் வேடத்திலேயே நடித்திருப்பார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகமானது. அப்போது அஜித் நடிப்பில் வெளியான படங்களில் மங்காத்தா அதிக வசூலை பெற்ற் படமாக இருந்தது.
அதன்பின் பல படங்களில் நெகட்டிவ் வேடத்தில் நடித்தார் அஜித். வெங்கட்பிரபுவுக்கும் அது ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் அர்ஜூன், பிரேம்ஜி, வைபவ், மஹத், திரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி, ஆண்ட்ரியா என பெரிய நடிகர் கூட்டமே நடித்திருந்தது. பணத்திற்கு ஆசைப்படும் அஜித் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ‘மனசிலாயோ’ அச்சு அசல் இந்தப் பாடலின் காப்பி! சரக்கு அவ்ளோதானா?
ஹாலிவுட்டில் வெளியான ஃபாஸ்ட் பியூரியஸ் படத்தின் சில காட்சிகளை சுட்டு அந்த படத்தில் வைத்திருந்தார் வெங்கட்பிரபு. ஆனாலும் அப்போது யாரும் அதுபற்றி அதிகம் பேசவில்லை. அதேநேரம், அந்த படத்திற்கு பின் வெங்கட்பிரபுவும், அஜித்தும் மீண்டும் இணையவில்லை.
வெங்கட்பிரபுவுக்கு விஜய் - அஜித் இருவரையும் வைத்து ஒரு படமெடுக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. அவர்கள் இருவருடன் புகைப்படம் எடுத்துகொண்ட ஒரே இயக்குனர் அவர் மட்டும்தான். இந்த ஆசையை அவர்களிடம் சொன்னபோது நல்ல கதை இருந்தா சொல்லு நடிக்கிறோம். ஆனா, நெகட்டிவ் ரோல்தான் நான்தான் செய்வேன் என இரண்டு பேரும் அடம்பிடித்ததாக வெங்கட்பிரபுவே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ஜெய் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘மங்காத்தா படத்தில் அஜித் சார் நடித்த ரோல் நான் பண்ன வேண்டியது. ஆனா, அஜித் சார் வந்த பின்னால் நான் போலீஸ் வேடம் கேட்டேன். மனசாட்சியே இல்லாம போலீஸ் ரோல் கேக்குறியேன்னு அவரே சிரிச்சிட்டாரு’ என ஜாலியாக பேசியிருந்தார் ஜெய்.
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28 படத்தின் மூலம் நடிக்க துவங்கியவர் ஜெய். ஏற்கனவே விஜயின் பகவதி படத்தில் வந்தாலும் அப்போது அவர் பிரபலமாகவில்லை. சென்னை 28 படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, கோவா ஆகிய படங்களில் ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் டீலில் விட்டா அடுத்து இந்த படம்தான்!.. அலார்ட் ஆன வெங்கட்பிரபு!….