Connect with us
jai_main_cine

Cinema History

ஒரு பெண்ணுக்காக படப்பிடிப்பையே ரத்து செய்த ஜெய்சங்கர்!.. யார் அந்த பெண் எதுக்காக தெரியுமா?..

தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா நாயகனாக போற்றப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர். தான் நடித்த முதல் படமான இரவும் பகலும் படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். முதல் படத்தின் பெயருக்கு ஏற்றாற் போல இரவும் பகலும் அயராது உழைத்தார் ஜெய்சங்கர்.

jai1_Cine

jaisankar

பெரும்பாலும் ஜெய்சங்கரின் படங்கள் துப்பறியும் கதையை அடிப்படையாக கொண்டே அமையும். அதன் காரணமாகவே இவரை ஜேம்ஸ்பாண்டி என்றே அழைக்கத்தொடங்கினார். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருந்த பிஸியான நடிகராக வலம் வந்தார்.

இதையும் படிங்க : நடுராத்திரி கமலை தேடிச் சென்ற ரஜினிகாந்த்… நான் கால்ல விழுந்துருவேன் என உருகிய தருணம்

அதன் விளைவாகவே வாரவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஒரு புதிய படம் ரிலீஸ் ஆகும். இதன் காரணமாக தான் வெள்ளிவிழா நாயகன் என அழைக்கப்பட்டார். நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் கொடை வழங்குவதில் கொடை வள்ளலாகவே இருந்தார். ஏராளமான கருணை இல்லங்களுக்கு இவர் மூலம் பல உதவிகள் நடந்து கொண்டிருந்தன.

jai2_cine

jaisankar

யார் வந்து இல்லை என கேட்டாலும் அள்ளிக் கொடுப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு சமயம் இவரின் புதிய வீடு கட்டுமானப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அதன் காண்டிராக்டர் இவருக்கு என்ன தெரிய போகுது எனக் கருதி தேவையில்லாத வெட்டி செலவுகள் செய்து கணக்குகளை காட்டிக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : துணிவு பார்த்து பயந்து ஓடுறவரு நம்ம ஆளு விஜய்!.. இந்த நேரத்துல இது தேவையா?.. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!..

அதை பார்த்ததும் மிகுந்த கோபப்பட்ட ஜெய்சங்கர் படப்பிடிப்பிற்காக காரில் ஏறி சென்று விட்டார். அவர் போகும் போது எதிரே ஒரு பெண் ஏதோ உதவியை கேட்க ஏற்கெனவே கோபப்பட்ட ஜெய்சங்கர் சட்டென காரில் ஏறி சென்று விட்டார். இதை பற்றி காரில் அவருடன் பயணித்த ஒர் பத்திரிக்கையாளர் எம்.பி.மணி என்பவர் ஜெய்சங்கரிடம் கோபப்பட்டது சரி,

jai3_cine

jaisankar

அதற்கு ஏன் அந்த பெண்ணை இப்படி உதாசினப்படுத்தினீர்கள் என்று கேட்டது, ஜெய்சங்கருக்கு கோபத்தில் அங்கு நடந்ததை மறந்து விட்டார் போலும். அதன்பின் விஷயம் அறிந்து படப்பிடிப்பிற்கு செல்லாமல் காரை திருப்பி வீட்டருகே சென்று அந்த பெண்ணை அழைத்து பேசியிருக்கிறார்.

அப்போது அந்த பெண் ஜெய்சங்கரால் படிக்க வைக்கப்பட்ட பெண் என்றும் மீண்டும் கல்விக்கு சில காசுகள் தேவைப்படுகிறது என்றும் அதை கேட்கத்தான் வந்தேன் என்றும் கூறினார்.இதை கேட்ட ஜெய்சங்கர் உடனே அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தேவையான பணத்தை கொடுத்து அனுப்பியிருக்கிறார். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top