டான்சர் கமலை நடிகர் கமலாக மாற்றியவர்!.. வெளிச்சத்தை உணர வைத்த பழம்பெரும் நடிகர்!..
இன்று ஒரு உலக நாயகனாக உலக அளவில் பேரையும் புகழையும் பெற்று விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் 80களில் வந்த பெரும்பாலான படங்கள் ஒரு காவியமாகவே சித்தரிக்கலாம். அந்த அளவுக்கு தன் தனித்துவமான நடிப்பால் ஒட்டுமொத்த சினிமாவையும் 80களின் காலகட்டத்தில் கட்டி போட்டவர் கமல்.
பல மொழிகளை அறிந்தவர். ஹிந்தி உட்பட பல மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல படங்களில் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். மேலும் நடிகனாக பாலசந்தர் தான் இவரை அறிமுகப்படுத்தினார்.
இதையும் படிங்க : எம்ஜிஆர் அழைத்தும் நடிக்க மறுத்த நாட்டிய மங்கை!.. அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்!..
ஆனால் இவர் சினிமாவில் மீண்டும் நாயகனாக நடிக்க வருவதற்கு காரணமாக இருந்தவர் நடிகர் ஜெய்சங்கர் தானாம். ஆர்மபத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பின் வாலிப வயதில் அதாவது குழந்தை நட்சத்திரத்திற்கும் ஹீரோ அந்தஸ்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒர் நடன இயக்குனரிடம் உதவி நடன இயக்குனராக சேர்ந்திருக்கிறார்.
அப்போது ஜெய்சங்கரின் ஒரு படத்திற்கு நடன இயக்குனராக கமல் சென்றாராம். ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது அட்டகாசமான நடிப்பை பார்த்த ஜெய்சங்கர் இப்படி ஒரு உதவி நடன இயக்குனராக பார்த்த கமலை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
அதன் பின் அவர் தான் கமலை மீண்டும் நடிக்க வருவதை பற்றி எடுத்துரைத்திருக்கிறார். ஆனால் ஒர் கட்டத்தில் கமலின் ஒரு படத்தில் கமலுக்கு வில்லனாகவே ஜெய்சங்கர் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.