ஜெய்சங்கர் புகழ் பாடிய கிராம மக்கள்!.. வாயடைத்து நின்ன பாக்யராஜ்!. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி இவர்களுக்குப் பிறகு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க நடிகராக வந்தவர் ஜெய்சங்கர். இவர் செய்த பல நல்ல உதவிகள் மக்களிடையே ஒரு நன்மதிப்பை பெற காரணமாக இருந்தது. நடிகர்களிலேயே ஜெய்சங்கர் மட்டும் தான் பல உதவிகளை செய்ய முன் வந்தார்.
தன் கீழே இருக்கும் கடை நிலை ஊழியர்களையும் ஒரு தயாரிப்பாளராக்க வேண்டும் என்றால் எண்ணம் கொண்டவர் ஜெய்சங்கர். தன்னுடைய நண்பர்கள் ,டிரைவர்கள் என அனைவரையும் தயாரிப்பாளர் ஆக்கிய பெருமைமிக்க நடிகர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் .அதற்கேற்றார் போல இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஜேம்ஸ் பாண்ட் கதைகளை மையப்படுத்தியே அமையப்பட்டவையாக இருந்தன.
சி ஐ டி யாக இவர் நடித்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. வருடத்திற்கு அதிக படங்கள் நடித்த ஒரே நடிகர் ஜெய்சங்கர் அதனாலையே இவரை வெள்ளி விழா நாயகன் என்றும் அழைப்பார்கள். அந்த அளவுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜெய்சங்கரின் படம் ரிலீஸ் ஆகிக்கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் நடிகர் ஜெய்சங்கரை பற்றி நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் அவருடைய கட்டுரையில் ஒரு பதிவை பதிவு செய்திருக்கிறார். அந்தக் கட்டுரையில் ஜெய்சங்கர் எந்த அளவுக்கு நல்லவர் என்றும் அவர் கூறியிருக்கிறார். தூறல் நின்னு போச்சு என்ற படத்திற்காக பாண்டியராஜனும் அவருடைய குருவான பாக்கியராஜும் ஒரு குக் கிராமத்திற்கு சென்றனராம்.
அங்கே லொகேஷனை பார்ப்பதற்காக ஒரு கிராமத்திற்கு சென்று இருக்கிறார்கள். இருபதே வீடு உள்ள அந்த கிராமத்தில் மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். அப்போது அங்கு உள்ள ஒரு சிறுவனிடம் பாக்கியராஜ்" உனக்கு எந்த நடிகர் பிடிக்கும்" என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த சிறுவன் "எங்களுக்கு பிடித்த நடிகர்கள் இரண்டே பேர் தான். ஒருவர் எம்ஜிஆர் மற்றொருவர் ஜெய்சங்கர்" என்று கூறி இருக்கிறான்.
அதற்கு பாக்கியராஜ் "ஏன் அவர்களை மட்டும் பிடிக்கும்" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த சிறுவன் "அந்த இரண்டு நடிகர்கள் மட்டுமே நல்லவர்கள். அவர்கள்தான் நிறைய பேருக்கு உதவிகளை செய்திருக்கின்றனர் .அதனால் தான் எங்களுக்கு அந்த இரண்டு நடிகர்களை மட்டும் பிடிக்கும்" என்று கூறி இருக்கிறான்.
இதைக் குறிப்பிட்டு பாண்டியராஜ் அவருடைய கட்டுரையில்" எம்ஜிஆரை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் ஜெய்சங்கரும் எந்த அளவுக்கு மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறார் என்பதற்கு உதாரணமாக இந்த சிறுவன் சொன்ன பதிலே முறையாகும்" என அவருடைய கட்டுரையில் பதிவிட்டிருக்கிறார்.