சம்பளமே வாங்காமல் பல படங்களில் நடித்த ஜெய்சங்கர்!.. இது செம மேட்டரா இருக்கே!...
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே அதிக படங்களில் நடித்த நடிகராக இருந்தவர் ஜெய்சங்கர். நிறைய துப்பறியும் படங்களில் நடித்ததால் ரசிகர்கள் இவரை ‘தென்னக ஜேம்ஸ்பாண்ட்’ எனவும் அழைத்தனர். அதிரடி சண்டைக்காட்சிகள் மட்டுமில்லாமல் குடும்ப பாங்கான கதைகளிலும் ஜெய்சங்கர் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜியை வைத்தும் படம் எடுக்க முடியாத சிறிய தயாரிப்பாளர்கள் தேடிச்சென்ற நடிகர்களில் ஜெய்சங்கர் முக்கியமானவர்.
அதிலும், படம் தயாரிக்க ஆசைப்படும், ஆனால், கையில் படம் எடுக்க போதுமான பணம் இல்லாத பல தயாரிப்பாளருக்கு ஜெய்சங்கர்தான் வரப்பிரசாதமாக இருந்தார். அதாவது, அந்த காலத்தில் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க ரூ.50 லட்சம் தேவைப்படும். ஆனால், தயாரிப்பாளர் கையில் அவ்வளவு பணம் இருக்காது.
நடிகர்கள் சம்பளத்திற்கே ரூ.40 லட்சம் தேவைப்படும். எனவே, ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் அப்படத்தில் நடிப்பார் ஜெய்சங்கர். மேலும், அப்படத்தில் நடிக்கவிருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளிடம் ஜெய்சங்கரே பேசுவார். சம்பளமில்லாமல் நடியுங்கள். படம் ரிலீஸாவதற்கு முன் உங்கள் சம்பளம் வரும். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் எனக்கூறுவார்.
தயாரிப்பாளர் கையில் இருக்கும் பணத்தை வைத்து மற்ற செலவுகளை செய்து பணத்தை முடிப்பார். படத்தை வியாபாரம் செய்து நடிகர்கள், நடிகைகளின் சம்பளத்தை ஜெய்சங்கர் வாங்கி தந்து விடுவார். இப்படி எல்லோரையும் ஒருங்கிணைத்து பல படங்கள் உருவாக ஜெய்சங்கர் காரணமாக இருந்துள்ளார். இப்படி பல புதிய தயாரிப்பாளர்களை ஜெய்சங்கர் உருவாக்கியுள்ளார்.
இப்போதுள்ள நடிகர்கள் அட்வான்ஸாக 75 சதவீத சம்பளத்தை வாங்காமல் படப்பிடிப்புக்கே வரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒவ்வொன்னும் சும்மா அதிருது!.. தூக்கலான கிளாமரில் கியாரா அத்வானி…