எம்.ஜி.ஆருக்கு பயந்து திமுகவில் சேர்ந்த ஜெய்சங்கர்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!..
60களில் திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் ஸ்டீரியோ டைப் அதாவது ஒரேமாதிரியான கதையம்சம் கொண்ட கதைகளில் நடித்துகொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு மாற்றாக, நம்பிக்கை நட்சத்திரமாக வந்தவர் ஜெய்சங்கர். குடும்ப கதைகள் மட்டுமில்லமால் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் பல துப்பறியும் கதைகளிலும் நடித்தார். ஒருகட்டத்தில் இவரும் ஒரே மாதிரியான கதைகளில் நடிக்க துவங்கினார்.
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்கிற பட்டமும் அவருக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோர் முன்னணி ஹீரோக்களாக இருந்தபோது ஜெய்சங்கர் பல வெற்றிப்படங்களை கொடுத்தார். ஹீரோ வாய்ப்புகள் குறைந்த பின்னர் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார்.அது என்னவோ இவருக்கும், ஜெய்சங்கருக்கும் இடையே ஒத்துவரவில்லை.
ஜெய்சங்கர் மீது சில காரணங்களால் எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்பட்டது குறிப்பாக, அவர் ஜெயலலிதாவுடன் படங்களில் நடித்ததும், அவருடன் நெருக்கமாக பழகியதும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவே இல்லை. ஒருமுறை ஜெயலலிதாவின் வீட்டில் ஜெய்சங்கர் இருந்தபோது கோபத்தில் துப்பாக்கி எடுத்துக்கொண்டு அவரை சுடப்போனார் எம்.ஜி.ஆர். இதைக்கேள்விப்பட்டு ஜெய்சங்கர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
எம்.ஜி.ஆர் தன் மீது உச்சக்கட்ட கோபம் கொண்டிருப்பதை புரிந்து கொண்ட ஜெய்சங்கர், கலைஞர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். ஜெய்சங்கருக்கு எந்த பிரச்சனையும் வராமல் கருணாநிதி பார்த்துக்கொண்டார். எம்.ஜி.ஆரின் கோபம் குறைந்தபின்னரே திமுகவிலிருந்து விலகினார் ஜெய்சங்கர்.
இந்த தகவலை ஜெய்சங்கருடன் நெருங்கி பழகியவரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் காந்தராஜ் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.