Connect with us
Janagaraj

Cinema History

திடீரென நடந்த விபத்து!.. அதையும் தாண்டி சாதித்து காட்டிய ஜனகராஜ்!.. எல்லாமே ஹிட்டு!…

தமிழ்சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் ஒருசிலரை திரையில் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். அவர்களில் ஒருவர் தான் ஜனகராஜ். எழுத்தாளர் ராஜகம்பீரன் நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் மற்றும் கவுண்டமணி குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

பொதுவாக சென்னையில் இருப்பவர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைப்பதில்லை. வெளியூர்க்காரர்களுக்குத் தான் கிடைக்கும். ஏன்னா அவர்களுக்குத் தான் ஒரு வெறி இருக்கும். சினிமா வாய்ப்பு தேடி ராப்பகலா அலைவார்கள். நடித்தாலும் அவர்களுக்கு தங்க இடம் கிடைக்காது. நல்ல சாப்பாடு கிடைக்காது. அதனால் வெறிகொண்டு உழைப்பார்கள். வெற்றி பெற்று முன்னுக்கு வருவார்கள். அந்த வகையில் ஜனகராஜ் விதிவிலக்கு. இவர் சினிமாவைத் தேடிப் போகவில்லை. இவரைத் தேடி சினிமா வந்தது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் பாரதிராஜா தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்புறம் இருந்தவர் ஜனகராஜ்.

பாரதிராஜா, பாவலர் குரூப்ஸ் இவருக்கு நண்பர் ஆனார்கள். காலேஜ்ல படிக்கும்போது படிப்பு சரியாக வரல. ஒரு பொண்ணை பாலோ பண்றாரு. கல்யாணம் முடிச்சிக்கிடறாரு. வயலின் கத்துக்கறாரு. நாடகங்களிலும் நடிக்கிறாரு. கதாநாயகன் ஆகணும்னு கனவு இருக்கு. யாரைப் பார்த்தாலும் அவரை மாதிரியே வரணும்னு ஆசைப்படறாரு. பாரதிராஜாவிடம் போய் உதவி இயக்குனரா நடிக்க ஆசைப்படறாரு.

Akni Natchathram

Akni Natchathram

ஆனால் அவரோ உன்னைப் படத்துல நடிக்க வைக்கிறேன்னு சொல்றாரு. அதுக்கு அப்புறம் இதுபற்றி எல்லோரிடமும் நான் பாரதிராஜா படத்துல நடிக்கப் போறேன்னு சொல்லிடறாரு. வேற வழியே இல்லாம, பாரதிராஜா இவரை கிழக்கே போகும் ரயில் படத்துல பஞ்சாயத்து சீனில் முதியவரா உட்கார வைக்கிறார். பாலைவனச்சோலை படத்தில தான் அவரு வெளியே தெரியறாரு. அதே போல காதல் ஓவியம் படத்தில் ராதாவைக் கல்யாணம் பண்ணப்போற மாப்பிள்ளையாவே நடித்தவர் ஜனகராஜ் தான்.

பாண்டிச்சேரில ஒரு விசேஷத்துக்குப் போயிட்டு காரில் திரும்பும்போது அவர் மேல எதிர்பாராதவிதமாக ஒரு கல் வந்து மோதுது. அதுல அவரது இடது தாடை எலும்பு உடைந்தது. அதுல தான் அவரது கண்ணும் பாதிக்கப்பட்டு ஒன்றரை கண் மாதிரி சுருங்கிவிட்டது. அது யாரை நோக்கி வீசப்பட்ட கல்லோ தெரியவில்லை. முன்விரோதமும் இல்லை.

இதையும் படிங்க… கமல் எடுத்த விடாமுயற்சி… ரஜினி வைத்த விக்… விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… இயக்குனர் சொல்லும் சுவாரசியங்கள்!

அந்தக்கால கட்டத்தில் வேற ஏதோ பிரச்சனையைச் சார்ந்து வீசப்பட்ட கல் தான் அது. இனிமே நமக்கு சினிமா வாழ்க்கையே முடிந்து போனது என்று நினைக்கிறார். அதன்பிறகு தான் அவர் சினிமாவில் பிரபலமாகிறார். உருவத்தை வைத்து மட்டுமல்ல. திறமையை வைத்தே ஜொலிக்க முடியும் என்பதற்கு இவர் தான் உதாரணம். கவுண்டமணி சினிமாவில் நடித்தால் கவுண்டமணியாகவே தான் நடிப்பார். ஆனால் வடிவேலு அந்தக் கேரக்டராகவே மாறிவிடுவார். இதுக்கு எல்லாம் முன்னோடி ஜனகராஜ் தான். அவர் அந்தக் கேரக்டராகவே மாறிடுவார். ஜனகராஜைப் பொருத்தவரை எப்போ கேரக்டர் ஆர்டிஸ்ட், எப்போ காமெடி பண்ணுவாருன்னு தெரியாது.

அக்னி நட்சத்திரம் படத்தில் பஸ்ஸ்டாண்டுல தன்னோட மனைவியை பஸ் ஏற்றி விடுவார். அப்போ தேம்பி தேம்பி அழுவாரு. அந்த பஸ் மூவ் ஆகிப் போனதும் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டான்னு அந்த பஸ்ஸ்டாண்டையே ரணகளமாக்கிடுவாரு. அந்தக் காமெடியை இப்பக்கூட நீங்க யூடியூப்ல பார்க்கலாம். ஜனகராஜோட தனித்துவமான காமெடிக்கு இதுதான் காரணம். அதனால தான் கவுண்டமணி, செந்தில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்திலும் ஜனகராஜ் நின்னு ஜெயிச்சாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top