Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு வளரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் சிறப்பான இடத்தை பெற்ற நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
ஆரம்பத்தில் இவருடைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபகாலமாக இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இருந்தாலும் தொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: யோசிக்காமல் செய்த லதா… மனைவிக்கு விடுதலை தர அந்த பழக்கத்தினை விட்ட ரஜினிகாந்த்..
இந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வெளி வர காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘சைரன்’. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஜெயம் ரவியும் கீர்த்தியும் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள்.
அப்படி ஒரு பேட்டியில் விஜயின் அரசியல் குறித்து சில கேள்விகளை கேட்டனர். அடிப்படையிலேயே ஜெயம் ரவியும் கீர்த்தியும் விஜயின் தீவிர ரசிகர்கள். இந்த கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி ‘விஜய் அரசியலுக்கு போனால் என்ன? அவர் நடித்த படங்களை திரும்ப திரும்ப போட்டு பார்ப்போம். சினிமாவில் அவர் இல்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்? எத்தனை நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்’ என கூறினார்.
இதையும் படிங்க: அந்த பாட்டை கண்ணதாசன் தான் எழுத வேண்டும்… அடம் பிடித்த எம்ஜிஆர்.. அதிர்ந்த படக்குழு…
கூடவே கீர்த்தி சுரேஷும் ‘ஆமாம். விஜயின் நடிப்பில் ஏகப்பட்ட நல்ல படங்கள் இருக்கின்றன. அதை சினிமாவிற்குள் வர நினைப்பவர்கள் பார்த்து வரட்டும். அந்தளவுக்கு சினிமாவில் விஜயின் பங்களிப்பு ஏராளம்’ என கூறியிருக்கிறார். இவர்கள் கூறுவதை பார்த்தால் விஜய் நடித்த பல படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகும் என்று தெரிகிறது.




