அழைக்காத திருமணத்தில் அதிர்ச்சி கொடுத்த ஜெய்சங்கர்!.. யாருடைய திருமணம் தெரியுமா?..
தமிழ் திரையுலகில் மாபெரும் ஆளுமைகளாக இருந்த எம்ஜிஆர் , சிவாஜியின் படங்களுக்கே டஃப் கொடுத்த நடிகர் ஜெய்சங்கர். இவரின் படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களாகவே அமைந்தது. மேலும் துப்பறியும் படங்களில் அதிகம் நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்றே அழைத்தனர்.
வருடத்திற்கு எக்கச்சக்க படங்களில் நடித்து மாபெரும் சாதனை படைத்தார் ஜெய்சங்கர். இவரின் எளிமை, மற்றவர்களிடம் பழகும் முறை ஆகியவை வெகுவாக ஈர்த்தது. சம்பளம் விஷயத்தில் கறார் காட்டாதவர் ஜெய்சங்கர்.
சில நேரங்களில் சும்மா கூட நடித்துக் கொடுத்திருக்கிறாராம். மேலும் மேல் நாட்டு நாகரிக பழக்கத்தை கொண்டு வந்தார். நடிகர்களிலே பட்டயப்படிப்பு படித்தவர் ஜெய்சங்கர்.சிவாஜி, எம்ஜிஆரை வைத்து படம் எடுக்க முடியாத தயாரிப்பாளர்கள் ஜெய்சங்கரை வைத்து படம் எடுத்து பட்டம் சூட்டினர்.
பணம் இல்லாத தயாரிப்பாளர்களுக்கு ஜெய்சங்கர் ஒரு வரப்பிரசாதமாகவே மாறினார். சில நேரங்களில் பணத்தை பொருட்டாக நினைக்காமல் நடித்துக் கொடுப்பாராம். மேலும் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர். அப்படி ஒரு சம்பவத்தை தான் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார்.
அதாவது சிவக்குமார் 1999 ஆம் ஆண்டு தனது திருமண வெள்ளிவிழாவினை கொண்டாட திட்டமிட்டிருந்தாராம். தனது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தாராம் சிவக்குமார். அப்போது பத்திரிக்கையாளர் சுதாங்கன் சொன்னதின் பேரில் ஜெய்சங்கருக்கு அந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க : மகிழ்திருமேனியிடம் பருப்பு வேகாது போலயே!..அஜித்தை தட்டிக் கழித்த இயக்குனர்.. ஆரம்பமே சூப்பரா இருக்கே?..
ஆனால் ஜெய்சங்கருக்கு எந்த ஒரு அழைப்பிதலும் சிவக்குமார் வைக்கவில்லை. எனினும் நண்பர் திருமண விழாவிற்கு அழைத்தால் தான் போக வேண்டுமா? என்ன? என்று திடீர் விசிட் கொடுத்தாராம் ஜெய்சங்கர். இதை குறிப்பிட்டு சொன்ன சித்ரா லட்சுமணன் எந்த அளவுக்கு நட்புக்கு மரியாதை கொடுத்திருக்கிறார் ஜெய்சங்கர் என்று நெகிழ்ந்து பேசினார்.