latest news

TTT படத்தில் கோல்மால் செய்த ஜீவா!.. படம் ஓடியும் கணக்கு வரலயே.. புரடியூசர் அப்செட்!…

பல வருடங்களுக்குப் பின் ஜீவாவுக்கு தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. இந்த படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது. பொங்கலில் ஜனநாயகன் வரவில்லை.. அதேபோல் வெளியான பராசக்தி வா, வாத்தியார் போன்ற படங்களும் ரசிகர்களை கவரவில்லை.

ஆனால், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இது ஜீவாவுக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதேநேரம் இந்த படத்தை வைத்து ஜீவா ஒரு கோல்மால் செய்திருப்பது வெளியே தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தை துபாயை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரித்திருந்தார்.

படம் பாதிக்கு மேல் முடிந்த நிலையில் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவானதால் ஜீவாவின் மேனேஜரை தயாரிப்பு தொடர்பான பணிகளை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறார் கண்ணன் ரவி. ஜீவாவின் மேற்பார்வையில் அவரின் மேனேஜர் இந்த படத்தின் தயாரிப்பு பணிகளை பார்த்துக் கொண்டார். தற்போது படம் முடிந்து வெளியான நிலையில் கணக்கு வழக்குகளை தயாரிப்பாளர் கண்ணன் ரவி கேட்டால் ஜீவாவின் மேனேஜர் கொடுக்க மறுக்கிறாராம்.

ஜீவாவிடம் கண்ணன் ரவி சொன்னாலும் அவரோ தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல அமைதியாகவே இருக்கிறாராம். கண்ணன் ரவி பலமுறை கேட்டும் சாதகமான பதில் வரவில்லை என்கிறார்கள். இந்த படம் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது ஜீவாவுக்கு இரண்டு கோடி சம்பளம் பேசப்பட்டது. ஆனால் தான் வேறு ஒரு இடத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறேன்.. இந்த படத்தில் 4 கோடி என் அக்ரிமெண்டில் சும்மா போட்டு கொடுங்கள் அப்போதுதான் எனக்கு ஐந்து கோடி சம்பளம் கொடுப்பார்கள் என ஜீவா சொல்ல அவர் கேட்டதை போலவே ஒப்பந்தத்தில் போட்டுக் கொடுத்திருக்கிறார் கண்ணன் ரவி.

தற்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அக்ரிமெண்டில் போட்டது உண்மையாகவே இருக்கட்டும் என நினைத்த கண்ணன் ரவி ஏற்கனவே கொடுத்த இரண்டு கோடி இல்லாமல் மேலும் 2 கோடியை ஜீவாவுக்கு சம்பளமாக கொடுத்திருக்கிறார் கண்ணன் ரவி. இவ்வளவு செய்தும் தன் மேனேஜரிடமிருந்து கணக்கு வழக்கை வாங்கி கொடுக்காமல் இருக்கிறாராம் ஜீவா. இது தயாரிப்பாளர் கண்ணன் ரவியை அப்செட் ஆக்கியிருக்கிறது என்கிறார்கள்.

Published by
சிவா