90களில் பல புதிய இளம் இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரியன் மகன் ஜீவா. வாரிசு நடிகராக சினிமாவில் களமிறங்கிய ஜீவா ராம் படம் மூலம் கவனம் ஈர்த்தார். அதன்பின் அவர் நிறைய படங்களில் நடித்தாலும் ஈ, சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட சில படங்கள் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
கடந்த பல வருடங்களாகவே ஜீவாவுக்கு ஹிட் படம் அமையவில்லை. அவரும் தொடர்ந்து பல இயக்குனர்களின் இயக்கத்திலும் நடித்துப் பார்த்தார். ஆனால் அவருக்கு ஒரு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் ஜீவாவின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. முதலில் குறைவான தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு தற்போது தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார் ஜீவா. குறிப்பாக படம் போடும் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில்தான் ஜீவா விமான நிலையத்தில் வந்து கொண்டிருந்தபோது அங்கே இருந்த ஒருவரிடம் ‘ஜனநாயகன் படத்தோட டைரக்டர் பின்னாடி வரார்’ என்று சொல்லிவிட்டு போனார் ஜீவா.
அவர் சொன்னது போலவே ஜனநாயகன் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் பின்னாடி நடந்து வந்து கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
. @JiivaOfficial — Pinnadi JanaNayagan Padathoda Director vararu paarunga 😂😭 pic.twitter.com/rleOHLyaJf
— Arun Vijay (@AVinthehousee) January 18, 2026




