பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி தான் மக்கள் படம் பார்க்க வருவாங்க...ஜீவா எந்தப்படத்தை சொல்கிறார்னு தெரியுதா?

by sankaran v |   ( Updated:2022-07-17 17:25:42  )
பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி தான் மக்கள் படம் பார்க்க வருவாங்க...ஜீவா எந்தப்படத்தை சொல்கிறார்னு தெரியுதா?
X

jiiva

சுறுசுறுப்பான துறுதுறுப்பான நடிகர்களில் ஒருவர் யார் என்றால் ஒருசிலரைத் தான் சொல்ல முடியும். நவரச நாயகன் கார்த்திக்கை அப்போதைய காலகட்டங்களில் சொல்வார்கள். இப்போது நாம் சொல்ல வேண்டும் என்றால் இளம் நடிகர்களில் பலர் இருந்தாலும் ஜீவா அந்த லுக்கிற்குப் பொருத்தமானவராக இருப்பார்.

இவரது கோ படம் ஒன்றே அதற்கு சாட்சி. துறுதுறுவென பத்திரிக்கை போட்டோகிராபராக வலம் வருவார். இவரது திரை உலக அனுபவங்களில் சிலவற்றை அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

கற்றது தமிழுக்கு அப்புறம் ராம் 4 படம் தான் பண்ணிருப்பேன். நான் சில இயக்குனர்களைத் தேடினேன். அதனால் தான் நீண்ட இடைவெளி விழுந்தது. நான் 40 படங்கள் பண்ணிருக்கேன். 30 படங்கள் புது இயக்குனர்கள் தான்.

jiiva

இன்னிக்கு இருக்குற காலகட்டத்தில் படம் நல்லாவே இல்லன்னு சொல்றாங்கன்னா படத்தைப் பார்த்துட்டு தான் சொல்றாங்க. இந்த மாதிரி டைம்ல ஓடிடி நேரத்துல த்ரில்லர் படங்கள் பண்ணலாம். சிவா மனசுல சக்தி படத்தை இன்னைக்கு வரைக்கும் பார்த்துட்டு இருக்காங்க.

3 நாளைக்கு இந்த ஓபனிங் வரணும்னா அதுக்கு ஏத்த மாதிரி காம்பினேஷன் டைரக்டர்ஸ் வரணும். விக்ரம் படம் பட்ஜெட்ல எனக்குத் தெரிஞ்சி 20 சின்ன படம் பண்ணலாம். 3 கோடிக்கு ஒரு படம் பண்ணுனா அந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி தான் மக்கள் படம் பார்க்க வருவாங்க. அந்த லாபம் தான் கிடைக்கும்.

விக்ரம் மாதிரி பெரிய பட்ஜெட் படங்கள்ல தான் விஜய்சேதுபதி, சூர்யா என நடிக்க வைக்கலாம். அவர்கள் எல்லாம் நடிக்கும்போது அனைத்துத் தரப்பு ரசிகர்களும் திரையரங்கிற்கு வருவார்கள். 3 கோடி பட்ஜெட் படத்திலயோ, த்ரில்லர் படத்திலயோ ரசிகர்களை முழுமையாக நாம் கவர்ந்து இழுக்க முடியாது. அதனால காசுக்கேத்த தோசை தான்.

மோகன்லால், விக்ரம், விஜய், அருள்நிதி, ரன்வீர் ஆகியோருடன் படங்கள் நடித்துள்ளேன். கோ படம் கூட மல்டி ஸ்டார் படம் தான். சுந்தர் சி.யின் இயக்கத்தில் நான் ஜெய்யுடன் இணைந்து காபி வித் காதல் படத்தில் நடித்து வருகிறேன்.

jeeva

சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை, கலகலப்பு 2 படங்கள் எல்லாம் நல்ல படங்கள். ராம், கற்றது தமிழ், களத்தில் சந்திப்போம், சிவா மனசுல சக்தி படங்கள்லாம் யுவன் சாருடன் இணைந்த படங்கள் தான். நல்ல பாடல்கள் உள்ள படங்கள். இப்போ காபி வித் காதல் படம். இதுல சாங்ஸ் உண்மையிலேயே ரொம்ப நல்லா வந்துருக்கு.

இன்னிக்கு உள்ள டிஜிட்டல் பிளாட்பார்ம் நிறைய நாளைய இயக்குனர்களுக்கு உதவியாக இருக்கு. த்ரில்லர் படம் பிடிச்சவங்களுக்கு எல்லாம் த்ரில்லர் படம் எடுக்கலாம். ஆக்ஷன் படங்கள் பிடிச்சவங்களுக்கு ஆக்ஷன் படம் எடுக்கலாம். நல்ல ஸ்கிரிப்ட் இருந்து அந்த பட்ஜெட்ல படம் எடுத்தாலே போதும். நோ லாஸ்.

Next Story