கோலிவுட்டிற்கே சவால் விட காத்திருக்கும் காளி வெங்கட்! என்னப்பா கமுக்கமா இருந்து சம்பவம் பண்றாரே
தமிழ் சினிமாவில் எத்தனையோ துணை நடிகர்கள் காமெடி நடிகர்கள் என அவரவர் கதாபாத்திரங்களில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் வரும்போது அதை பயன்படுத்திக்கொண்டு முன்னேறி செல்கின்றனர். அப்படி வந்த வாய்ப்பு தான் நடிகர் சூரிக்கும். விடுதலை படத்தில் தான் ஒரு ஹீரோ என்பதை அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.
ஆனால் அந்தப் படம் வெளியான பிறகு சூரியை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் வெற்றி அவரை இன்னும் ஒரு படி மேலாக இழுத்துச் செல்கின்றது. ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சூரியை தேடி வந்திருக்கின்றது.
இந்த நிலையில் பல திரைப்படங்களில் ஒரு அண்ணனாக நகைச்சுவை நடிகனாக தோழனாக நடித்தவர் நடிகர் காளி வெங்கட். சாய் பல்லவி நடித்த கார்கி திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பல படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
இந்த நிலையில் ஒரு பீரியாடிக் படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் காளி வெங்கட். அந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தான் ரிலீஸ் செய்கிறாராம். கதை என்னவென்றால் முதல் தபால்காரராக பணியாற்றியவரின் கதையை பற்றிய படம் தான் இதில் பேசப்பட உள்ளதாம்.
இதையும் படிங்க : சிறுத்தையையும் சிங்கத்தையையும் ஒரே கூண்டுல அடைச்சா என்னாகும்? ஒன்றாக களமிறங்கும் சூர்யா – கார்த்தி
அதாவது இன்றைய சூழலில் உள்ள வசதிகள் அந்த காலகட்டத்தில் இருந்திருக்காது. அதனால் அந்த கடிதத்தை தபால்காரர் எப்படியெல்லாம் கொண்டு போய் சேர்த்தார் ?மலை மீதும் குன்றுகள் மீதும் ஏரி இறங்கி சேர்க்க வேண்டிய இடத்தில் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு சேர்க்கிறார் என்பதை பற்றி விளக்கும் படம் தான் இந்த காளி வெங்கட் நடிக்கும் படமாம்.
இதுவரை வெளியான பீரியாடிக் படங்களிலேயே இந்தப் படம் பெருமளவு பேசப்படும் என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.