More
Categories: Cinema News latest news

விஜயகாந்தை பற்றி கமல் எப்போதும் சொல்லும் ஒரு வார்த்தை! போட்டி நடிகர்களையே பிரமிக்க வைத்த கேப்டன்

Kamal Vijaykanth: தமிழ் சினிமாவில் 80களில் மூவேந்தர்களாக சினிமாவை தன் வசம் வைத்திருந்த நடிகர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த். இதில் விஜயகாந்துக்கு  முன்பே ரஜினியும் கமலும் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்கள். அதன் பிறகு திடீரென விஜயகாந்தின் வருகை தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி விட்டது.

புரட்சிகரமான படங்களின் மூலம் விஜயகாந்தை நடிக்க வைத்து எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தை மக்கள் பார்க்க ஆரம்பித்தனர் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். விஜயகாந்தை வைத்து மட்டும் தொடர்ந்து 18 படங்களை இயக்கினார். அவர் எடுத்த அத்தனை படங்களுமே சமூகத்திற்கு ஒரு ஆழமான கருத்தை சொல்லும் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் அடுத்த 2 மாத பிளான் இதானாம்.. இனிமே அதிரடி சரவெடி தான்…

அதனாலயே விஜயகாந்தின் மீது மக்களின் பார்வை திரும்பியது. எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். உதவி என ஓடோடி வருபவர்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது என மற்றவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் விஜயகாந்த். அவர் வீட்டுக்கு போனாலே சாப்பாடு நிச்சயம் என்ற அளவுக்கு தினந்தோறும் சாப்பாடு செய்ய சொல்லி வருபவர்களுக்கு கொடுப்பவர்.

இந்த நிலையில் அவருடைய திடீர் மறைவு ரசிகர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது. ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் சரி திரையுலகினரும் சரி விஜயகாந்தின் மறைவை நினைத்து வருந்தினர். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக ஒரு பெரும் கூட்டம் விஜயகாந்தின் மறைவின் போது நம்மால் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இயக்குனர் முரளி அப்பாஸ் விஜயகாந்த் பற்றி அவருடைய அனுபவங்களை கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு பதிலா கார்த்திக் நடிச்சா நல்லா இருக்கும்! வினியோகஸ்தர்கள் வாங்க மறுத்த விஜய் படம்

அவருடைய வாழ்க்கையிலும் விஜயகாந்தின் பங்கு மிக முக்கியமானது என்றும் முரளி அப்பாஸ் கூறினார். இந்த நிலையில் விஜயகாந்தை பற்றி கமல் எப்போதுமே ‘ மிகவும் இயல்பாக பேசக்கூடியவர். எப்போதுமே இயல்பாக இருப்பவர் விஜயகாந்த்’ என்று அடிக்கடி கூறுவாராம் கமல். அதைப்போல தான் அனைவரிடமும் இயல்பாக இருப்பார். பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தன் சகோதரர்கள் தன் உறவினர்கள் என்ற வகையில் தான் வழி நடத்துவார். இவ்வாறு இயக்குனர் முரளி அப்பாஸ் கூறினார்.

Published by
Rohini

Recent Posts