திடீரென கமல் கேட்ட மீன் குழம்பு!.. மயில்சாமி செய்த விஷயம்தான் ஹைலைட்!...

நகைச்சுவை நடிகர் மயில்சாமி சமீபத்தில் மாரடைப்பில் மரணமடைந்தார். தன்னுடைய சக்திக்கு மீறி பலருக்கும் பல உதவிகளை செய்தவர். குறிப்பாக தனக்கு தெரிந்த யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என உணவளித்தவர். எம்.ஜி.ஆரை மானசீக குருவாக வைத்து எல்லோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை எப்போதும் செய்ய வேண்டும் என்கிற உந்துதலிலேயே இருந்தவர்.

mayil
நலிந்த கலைஞர்கள் படிப்பு செலவு, மருத்துவ செலவு ஆகியவற்றுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்கள் போய் நிற்கும் ஒரே இடம் மயில்சாமியின் வீடுதான். அவரும் தன்னுடன் இருப்பது மற்றும் சரத்குமார், சத்தியராஜ், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களிடமும் வாங்கி பலருக்கும் உதவி செய்து வந்தவர். நடிகர் என்பதோடு நின்றுவிடாமல் சமூக செயல்பாட்டளராகவும் இருந்தவர். பல தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்தவர். சிவ பக்தராக இருந்தவர்.
இது எல்லாவற்றையும் மீறி யாருக்கும் தெரியாத சில விஷயங்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ரஜினி, கமல் இருவருக்கும் மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே, பலமுறை அவர்களின் வீட்டுக்கு மயில்சாமியின் மீன் குழம்பு சென்றுள்ளது. கமல் நேராக மயில்சாமிக்கு தொடர்பு கொண்டு மீன் குழம்பு வேண்டும் என கேட்பாராம். மயில்சாமியும் உடனே செய்து கொண்டுபோய் கொடுப்பாராம்.
ஒருமுறை கமல் அப்படி போன் செய்து மயில் ‘இன்னைக்கு மீன் குழம்பு வேண்டும்’ என சொல்லி போனை வைத்துவிட்டாராம். அன்றைக்கு பார்த்து மயில்சாமியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. உடனடியாக மீன் வாங்கி மீன் குழம்பை தயார் செய்யும் நிலையிலும் மயில்சாமி இல்லை.
எனவே, வீட்டிலிருந்து பாத்திரத்தை எடுத்துச்சென்று சென்னையில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் மீன் குழம்பை வாங்கி கமலிடம் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு பார்த்த கமல் அந்த கடையின் பெயரை சரியாக சொல்லி ‘மயில் அந்த கடை மீன் குழம்பு பிரமாதம்’ என்றாராம். இப்படி சில சுவாரஸ்ய சம்பவங்களும் கமல் - மயில்சாமி இடையே நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு பக்கம் ஏறி..ஒரு பக்கம் இறங்கி!.. ஏடாகூடமான உடையில் ஹனி ரோஸ்…