Cinema History
கதை சொன்ன கமல்!. எஸ்கேப் ஆன மணிரத்னம்!.. விருமாண்டி உருவான கதை!….
Kamal: ரசிகர்கள் பல வருடங்கள் கொண்டாடும் திரைப்படங்களுக்கு பின்னால் பல கதைகள் இருக்கும். அந்த படம் உருவாவதற்கு பின்னால் பல பின்னணிகள் இருக்கும். அது அந்த திரைப்படத்தை விட சுவாரஸ்யமாக இருக்கும். அது எல்லாம் சம்பந்தப்பட்ட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து இப்போது வரை எல்லோராலும் பேசப்பட்டு வரும் நாயகன் படம் உருவானதன் பின்னணியிலும் பல கதைகள் இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பது என முடிவானதும் அவரை அழைத்து பேசியிருக்கிறார்கள். வீட்டிலிருந்து கிளம்பும்போதே ‘நமக்கு செட் ஆகாது’ என சொல்லிவிடுவோம் என்கிற முடிவில்தான் மணிரத்னம் போயிருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினியை சந்தித்த சீமான்… விஜய் அரசியலுக்குள் இறங்கி அதிரடி காட்டியதுதான் காரணமா?
‘சரி இது இல்லையெனில் உங்களால் வேறு என்ன செய்ய முடியும்?’ என கமல் கேட்க, மணிரத்னம் சொன்ன கதைதான் நாயகன். அதுவும் ஒரு வரியில் சொன்ன கதை அது. அதேபோல், படத்தை எடுக்க சரியாக பணம் இல்லாமல் படப்பிடிப்பை நிறுத்தி நிறுத்தி எடுத்த படம் அது. ஆனால், தமிழ் சினிமாவின் எவர் கிரீன் கிளாசிக் படமாக எப்போதும் நாயகன் இருக்கும்.
அதேபோல், கமலே இயக்கி நடித்த விருமாண்டி திரைப்படமும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. ஏனெனில், இரண்டு பேரின் பார்வையில் இந்த படத்தின் கதையும், திரைக்கதையும் திரையில் விரியும். ரசிகர்களுக்கு இப்படம் புதிய அனுபவத்தை கொடுத்தது.
இந்நிலையில், இந்த படம் உருவானது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய கமல் ‘ஹே ராம் படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு போதவில்லை. எனவே, மூன்று கதாபாத்திரங்களை உருவாக்கி ஒரு கதை எழுதினேன். ஒரு பாகத்திற்கு ஒரு இயக்குனர் என நான், மணிரத்னம், சிங்கீதம் சீனிவாசராவ் என மூன்று பேர் இயக்கினால் சரியாக இருக்கும் என நினைத்தேன்.
ஆனால், ‘என்னால் முடியாது. இப்போது நான் ஆயுத எழுத்து என்கிற படத்தை இயக்கி வருகிறேன். அதுவும் இதே ஸ்டைல்தான்’ என மணிரத்னம் சொல்லிவிட்டார். சரி மூன்று பேர் இல்லையென்றால் என்ன.. இரண்டு பேர் இருக்கட்டும் என நான் உருவாக்கிய கதைதான் விருமாண்டி’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: Biggboss Tamil: சோத்துல உப்பு இல்லையா? சவுந்தர்யா, சிவாவை தரக்குறைவாக பேசும் போட்டியாளர்கள்…