Connect with us
lokesh

Cinema News

விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட்!…லோகேஷ் கனகராஜுக்கு ஆண்டவர் கொடுத்த அன்பு பரிசு….

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 3ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் விக்ரம். 4 வருடங்களுக்கு பின் கமல் படம் வெளியாவதாலும், லோகேஷ் கனகராஜோடு, கமல் இணைந்திருப்பதாலும் இப்படம் தொடக்கம் முதலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. அதோடு, விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் சிறிய வேடத்தில் சூர்யாவும் நடித்திருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்து வருகின்றனர்.

படம் வெளியான அன்றே விக்ரம் படம் தமிழகத்தில் இப்படம் ரூ.25 கோடியை வசூல் செய்தது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலக அளவில் இப்படம் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு இதற்கு முன்பு கிடைத்தது இல்லை என கமல்ஹாசனே வெளிப்படையாக சொல்லும் அளவுக்கும் ரசிகர்கள் இப்படத்தை விரும்பி பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில்,இப்படி ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் ஒரு விலை உயர்ந்த lexus கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

lokesh

google news
Continue Reading

More in Cinema News

To Top