ஏழு வருடங்கள் நடிக்காமல் இருந்த கமல்!.. உலக நாயகனுக்கு இப்படி ஒரு சோதனையா?...
Kamalhaasan: 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கலைஞானி கமல்ஹாசன். அதுவும் முதல் படமே ஏவிஎம் தயாரிப்பில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானார். அதோடு, ஜெமினி - சாவித்ரி என பெரிய நடிகர்களுடன் நடித்தார். அதேநேரம், முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து எல்லோருக்கும் ஆச்சர்யமும் கொடுத்தார்.
வாலிபராக மாறியபின் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் கூட நடித்தார். அதேசமயம் பாலச்சந்தர் உள்ளிட்ட சிலரின் இயக்கத்தில் உருவான படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். கமலை ஒரு முழு நடிகராக மாற்றியது பாலச்சந்தர்தான். அவரின் இயக்கத்தில் பல படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: நிக்ஸன் கமெண்ட்டை கண்டுக்காமல் விட்ட கமல்ஹாசன்… இதுவே தெலுங்கில் நடந்த போது என்ன ஆனது தெரியுமா?
80களில் முன்னணி ஹீரோவாக மாறினார். ரஜினிக்கு போட்டியாக இருந்த ஒரே நடிகர் கமல் மட்டுமே. இப்போது விஜய் - அஜித் போல அப்போது ரஜினி - கமல் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வார்கள். இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகி போட்டி போடும்.
ரஜினி கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தால் கமல் நல்ல கதையம்சம் கொண்ட நாயகன், தேவர் மகன், குணா, மகாநதி, விருமாண்டி, விஸ்வரூபம், தசாவதாரம் ஆகிய படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார். இப்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் அடித்துள்ளது.
இதையும் படிங்க: பாடல் இல்லைனா என்ன?… வேற மாதிரி எடுக்கலாம்!… கமல் சொன்ன ஒத்த ஐடியாவால அசந்து போன இயக்குனர்…
இதன் மூலம், ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் களத்தில் நானும் இருக்கிறேன் என காட்டிவிட்டார். அடுத்து மணிரத்தினத்துடன் ‘தக் லைப்’ என்கிற படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படமும் உருவாகி வருகிறது.
ஆனால், இதே கமல்ஹாசன் 7 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி 1963ம் வருடம் வெளியானது. கமல் சிறுவனாக நடித்தது இதுதான் கடைசிப்படம். அதன்பின் 1970ம் வருடம் வெளிவந்த மன்னவன் என்கிற படத்தில் ‘விசிலடிச்சான் குஞ்சுகளா’ என்கிற படத்தில் டீன் ஏஜ் வாலிபனாக அறிமுகமானார். இடைப்பட்ட 7 வருடம் அவர் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் கமல்!. அட நம்பவே முடியலையே!.