சம்மதம் சொன்ன கமல்...முடிவு ரஜினி கையில்!...லோகேஷ் படத்தில் இருவரும் இணைவார்களா?!...

by சிவா |
kamal
X

80களில் பல திரைப்படங்களில் ரஜினி-கமல் இணைந்து நடித்தனர். கமல் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும், சில படங்களில் இருவரும் நண்பர்களாகவும் நடித்தனர். ஒருகட்டத்தில் இருவரும் தனியாக படங்களில் நடிப்பது என பேசி முடிவெடுத்தனர். ரஜினி, கமல் இருவரும் அவரவர் ஸ்டைலில் படங்களில் நடிக்க துவங்கினர்.

kamal

அதன்பின், கடந்த 30 வருடங்களுக்கும் மேல் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இதுபற்றி கேள்விகளுக்கும் இருவரும் மழுப்பலான பதிலையே கூறிவந்தனர். தற்போது விக்ரம் திரைப்படம் மூலம் ரஜினிக்கு நான்தான் போட்டி என நிரூபித்துள்ளார் நடிகர் கமல்.

விக்ரம் படம் மூலம் தொடர்ந்து 4 ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பட்டியைல் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.உண்மையில், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தையே லோகேஷ் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் ரஜினி நடிக்கவில்லை. அதன் பின்னரே கமலும், லோகேஷும் இணைந்து விக்ரம் படத்தை கொடுத்தனர்.

lokesh

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீங்களும், ரஜினியும் இணைந்து நடிப்பீர்களா என கமலிடம் கேட்டதற்கு ‘நான் எப்போதும் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயார். அது லோகேஷ் படத்தில் நடக்குமா என்பதை லோகேஷும், ரஜினியும் தான் முடிவு செய்ய வேண்டும்’ என கமல் பதில் கூறியுள்ளார்.

ரஜினியும், கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. கமல் சம்மதம் கூறியுள்ள நிலையில், ரஜினி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Next Story