கே.ஜி.எஃப்- தமிழ் சினிமாவுல ஏன் பண்ண முடியல....? வழக்கமான பாணியில் கொழ கொழ பதிலளித்த கமல்ஹாசன்....!
நடிகர் கமல்ஹாசன் 4 வருடங்கள் கழித்து தன் திரைப்பயணத்தை ’விக்ரம்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் புதுப்பித்துள்ளார். ரசிகர்களின் ஆரவார சந்தோஷத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. முன்னனி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள ப்டமாக இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கின்றது.
அனிருத் இசையில் விக்ரம் வரும் 3ம் தேதி மிரட்ட வருகின்றது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக கமல், லோகேஷ் ஆகியோர் ஏகப்பட்ட பேட்டிகளில் கலந்து கொண்டு படத்தின் அனுபவத்தை பேசிவருகிறார்கள். அண்மையில் கூட ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கமல் ரசிகர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் கமலிடம் கே.ஜி.எஃப் படத்தை பற்றி கேட்கையில் “ 1000 கோடி வசூல் படைத்த கே.ஜி.எஃப், ஆனால் தமிழ் சினிமாவில் அந்த நிலையை யாரும் எட்ட முடியவில்லையே? அதற்கு காரணம் என்னவாக இருக்கும்? என கேட்டனர். அதற்கு வழக்கம் போல் தனக்கே உரித்தான பாணியில் சொன்னாலும் புரியாது ஆனால் பதில் சொல்லிதான் ஆகனும் என்ற விதத்தில் வித்தியாசமான பதிலை கூறினார்.
அவர் கூறும் போது “ ஒருத்தர் தப்பு பண்ணால் ஒட்டு மொத்த படத்திற்கும் கெட்ட பெயர். ஆனால் படம் வெற்றியடைந்தால் அது எல்லோரையும் பாராட்டுவோம்.தோல்வி அடைந்தால் இவன் தான் காரணம் என்று சொல்வது சரியில்லை. தயாரிப்பாளரும் நம்பி தான இறங்குகிறார் ஒரு படத்திற்காக, ஆகவே எல்லாரும் பொறுப்பேற்க வேண்டும். மேலும் நம் தமிழ் சினிமாவிற்கு வந்து நம்ம படத்தை ரீமேக் செய்து அங்கு வெற்றியடைந்த படங்களும் உண்டு. இது ஒரு தற்சுழற்சி தான். இந்த தற்சுழற்சி சினிமாவில் இருக்க வேண்டும்” என்று புரியாத புதிரை கூறினார்.