ஏஐ ஒன்னும் படிக்க போகல கமல்! அமெரிக்கா போறதே இதுக்குத்தானாம்..

by Rohini |
kamal
X

kamal

Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆளுமையாக இருப்பவர் நடிகர் கமல் .தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கும் கமல் அடுத்ததாக கல்கி இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். அதுபோக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை கமல் தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் எனக் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில் தன்னுடைய பணிசுமை காரணமாக இந்த நிகழ்ச்சியை என்னால் தொடர இயலாது. எனக்கு இத்தனை வருடங்களாக அன்பும் அக்கறையும் கொடுத்த பிக் பாஸ் ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கு மிக்க நன்றி எனக்கு கூறி அந்த அறிக்கையில் வெளியிட்டிருந்தார் கமல். இதுபோக அவர் ஒரு ஆறு மாத காலம் ஏஐ தொழில்நுட்பத்தை பற்றி படிக்க அமெரிக்க செல்ல இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது .

இதையும் படிங்க: லியோ வசூலையே கோட் தொட முடியல… ஜெயிலர்கிட்டன்னா வாய்ப்பில்லை ராஜா

ஆனால் அவர் ஏஐ தொழில்நுட்பத்தை படிக்க போகவில்லை. வேறு ஒரு நோக்கத்திற்காகத்தான் போகிறார் என இப்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கமல் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார் .அவரிடம் உங்களுக்கும் கமலுக்குமான நெருக்கம் சமூகத்தைப் பற்றி எப்படி இருக்கிறது என கேட்டபோது அதற்கு பதில் அளித்த ஜீவி பிரகாஷ் நான் பொதுவாக பொலிடிகல் சம்பந்தமாக சமுதாய அக்கறையுடன் பல பதிவுகளை வெளியிட்டு இருக்கிறேன்.

அதை பார்த்து கமல் எனக்கு தொலைபேசியில் அழைத்து எனக்கு வாழ்த்து சொல்லுவார். அது மட்டுமல்லாமல் உங்களுடைய அரசியல் எண்ணம் நன்றாக இருக்கிறது .எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் ஒரு ஆறு மாத கால பயிற்சியாக பொலிடிக்கல் சயின்ஸ் படிக்க செல்கிறேன். நீங்களும் என்னுடன் வாருங்கள் என தன்னை அழைத்ததாக ஜிவி பிரகாஷ் கூறியிருந்தார்.

இதையும் படிங்க:குக்கா வந்தா சமையல் மட்டும் பண்ணனும்! பிரியங்காவின் அடாவடி.. பிரபலம் சொன்ன தகவல்

ஆனால் ஜிவி பிரகாஷ் அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் அரசியலையும் படித்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னை மிகவும் ஈர்த்தது என ஜிவி பிரகாஷ் கூறியிருக்கிறார் .இவர் சொல்வதில் இருந்து அவர் ஆறு மாத காலம் ஏஐ தொழில் நுட்பத்தை படிக்கப் போகிறாரோ இல்லையோ பொலிட்டிக்கல் சம்பந்தமாக படிக்கப் போகிறார் என தெரிகிறது.

Next Story