More
Categories: Cinema News latest news

கார்த்தி இப்படி இன்னொரு படம் நடிப்பரா?!.. சிவக்குமார் செய்வது சரியா?!.. வச்சு வாங்கும் கஞ்சா கருப்பு!..

Actor Kanja Karuppu: தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் தற்போது அமீர் பிரச்சினையை முன்னெடுத்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். பருத்திவீரன் படத்தில் நடித்த கஞ்சா கருப்பு அந்த படத்தை எந்தளவுக்கு  கஷ்டப்பட்டு அமீர் எடுத்தார் என எனக்கு தெரியும் என கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் அவருக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுத்தான் கேஸ் போட்டிருக்கிறார் அமீர். அது அந்த படத்தில் வேலை பார்த்த மற்ற கலைஞர்களுக்கு வர வேண்டிய தொகை. இப்போது பல கோடிகளில் சம்பளம் பெறும் கார்த்தி ஒரு ஒரு கோடியை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் என கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: தம்பி நான் யாருன்னு தெரியுமா?!… கிரிக்கெட் வீரரிடம் வம்பிழுத்த நடிகர் திலகம்!…

சிவக்குமார் ஒரு பெரிய மனுஷன் தானே? அவங்க பையன் சூர்யாவுக்கு நந்தா, மௌனம் பேசியதே இல்லைனா இன்னிருக்கு சூர்யா இல்ல. ஒரு பருத்திவீரன் இல்லைனா கார்த்தி இன்னிக்கு இல்ல. இவ்ளோ குரள் படிச்சவரு இந்த குரல் பேசட்டுமே? அவங்க பிள்ளைகள இந்தளவுக்கு உருவாக்கியிருக்காங்க.

நல்லவரா இருந்தாருனா? ஞானவேல் ராஜாவை அழைத்து ‘ நீ பேசுறது தப்பு. அவங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து செட்டில் பண்ணிவிடு ’ என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும். இவ்ளோ பிரச்சினை நடக்கும் போது சூர்யாவும் கார்த்தியுமுமே வாய மூடிக்கிட்டு சும்மாதான் இருக்காங்க.

இதையும் படிங்க: டி.எம்.எஸ் வேண்டாம்!.. இந்த பாட்டை அம்மு பாடட்டும்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பாடல் எது தெரியுமா?..

ஒரு குரு நாதருக்கு உண்டான மரியாதையை  கொடுத்தாங்களா அவங்க ரெண்டு பேரும்? எப்பேற்பட்ட தலைவர் எம்ஜிஆர்? அவரே ஏவிஎம் சரவணன் போன்ற பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை முதலாளி என்று அழைத்து நீங்கள் சொல்லுங்க முதலாளி என்றுதான் பேசுவார்.

ஏன்? ரஜினி கூட இப்ப வரைக்கும் பாலசந்தர் முன்னாடி கை கட்டிக் கொண்டுதான் பேசுவார். ஆனால் நீங்க என்ன மரியாதை கொடுத்தீங்க ? கார்த்தியை பருத்திவீரன் மாதிரி இன்னொரு படம் நடிக்க சொல்லுங்க. இந்த சினிமாவை விட்டே நான் போய்விடுகிறேன். அப்படிப்பட்ட படம் பருத்திவீரன் என சிவக்குமார் குடும்பத்தை வச்சி விளாசியிருக்கிறார் கஞ்சா கருப்பு.

இதையும் படிங்க: சண்டை மட்டும் போதுமா?!.. கொஞ்சம் கிளுகிளுப்பாவும் நடிங்க!. எம்.ஜி.ஆரை மாற்றிய இயக்குனர் இவர்தான்…

 

Published by
Rohini

Recent Posts