கார்த்தியின் 25வது படம்!..ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய படக்குழு!..
தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்களில் ஆகச்சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. தான் தேர்ந்தெடுக்கும் கதையை மிகவும் நேர்த்தியாகவும் ரசிகர்களை கவரும் விதமாக நடிப்பதில் படத்திற்கு படம் வித்தியாசத்தை காட்டிக் கொண்டு வருகிறார் கார்த்தி.
இந்த ஆண்டில் மூன்று தொடர் வெற்றிகளை கொடுத்த ஹாட்ரிக் நாயகனாக விளங்குகிறார் கார்த்தி. அடுத்ததாக ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜப்பான். இந்த படம் கார்த்திக்கு 25 வது படமாகும். மேலும் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.
இதையும் படிங்க : இனிமே என்னை பார்க்க வராதீங்க!..ஏவிஎம் சரவணனை திருப்பி அனுப்பிய எம்ஜிஆர்!..காரணம் இதுதான்!…
இந்த படத்தில் இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. gv.பிரகாஷ் இசையில் தயாராகும் ஜப்பான் படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும் அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டராகவும் களமிறங்குகிறார்கள். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது.
இந்த நிலையில் ஜப்பான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியிட உள்ள படக்குழு அதற்கு முன்னதாக ஒரு அசத்தலான போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.