தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு சிறப்பாக நடிக்கும் நடிகராக கருதப்படுபவர் தனுஷ். இயக்குனர் செல்வராகவன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பல படங்களில் வாய்ப்புகளை பெற்றார்.
தமிழில் கர்ணன், அசுரன், வட சென்னை மாதிரியான திரைப்படங்கள் தனுஷிற்கு முக்கியமான படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் கூட வாய்ப்புகளை பெற்றார் தனுஷ். பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதே போல ஹாலிவுட்டிலும் தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் அவருக்காக பல கதைகள் எழுதப்பட்டன. ஆனால் அப்போது தனுஷ் மிகவும் பிஸியாக இருந்ததால் அதில் வேறு கதாநாயகர்கள் நடித்தனர்.
கார்த்திக்கு வந்த வாய்ப்பு:
இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரனும் கூட தனுஷிற்காக ஒரு கதையை எழுதினார். கதையின்படி தனுஷ் ஒரு சாதரண குடும்பத்தை சேர்ந்தவர். அவரது வாழ்க்கையில் ரவுடிகளால் சில சிக்கல்கள் வரவே அதை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதே கதை.
ஆனால் அப்போது தனுஷ் வேறு படத்தில் நடித்து கொண்டிருந்ததால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன் அந்த படத்தை நடிகர் கார்த்தியை வைத்து எடுத்தார். அப்போது கார்த்தி நடித்து பருத்திவீரன் திரைப்படம் வெளிவந்து இருந்ததால் அவருக்கும் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்தது.
இந்த நிலையில் சுசீந்திரன் எடுத்த நான் மகான் அல்ல என்கிற அந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: விழாவிற்கு தாமதமாக வந்த கமல் – கொந்தளித்த எம்ஜிஆர்.. பயந்து நடுங்கிய அதிகாரிகள்!
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…