உண்மையான தக் லைஃப் இவர்தான்.. ‘கைதி 2’ பற்றி சூப்பரான அப்டேட் கொடுத்த கார்த்தி..

kaithi
எதிர்பார்ப்பு இல்லாத நடிகர்: சினிமாவில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடைய வேலையை சரியாக செய்து வரும் நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் கார்த்தி. தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தை மித்ரன் இயக்கியிருந்தார். இதில் லைலா, ராசி கண்ணா போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.
சர்தார் 2: படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இதில் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சர்தார் 2 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
கைதி 2 அப்டேட்: இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கார்த்தியின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கைதி 2. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவருடைய இரண்டாவது படமாக கார்த்தியை வைத்து எடுத்த திரைப்படம் தான் கைதி. ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் லோகேஷ்.
மாநகரம் திரைப்படம் அவருடைய முதல் படம் என்றாலும் கைதி திரைப்படம் தான் லோகேஷை இந்த சினிமாவிற்கு யார் என காட்டியது. ஒரே நாள் இரவில் ஒரு தரமான படத்தை கொடுக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் லோகேஷ். இது மற்ற இயக்குனர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை தந்தது. இந்த படம் பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில் தான் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை தற்போது கார்த்தி கூறியிருக்கிறார்.
அரவிந்த்சாமியுடனான கெமிஸ்ட்ரி:தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் கைதி2 படம் கண்டிப்பாக ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் கார்த்தி. இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மெய்யழகன். அந்த படத்தில் இவருக்கும் அரவிந்த்சாமிக்கும் இடையேயான அந்த நெருக்கம் கெமிஸ்ட்ரி அனைவரையும் ரசிக்க வைத்தது.

அரவிந்த்சாமியை பற்றி கார்த்தி குறிப்பிடும் பொழுது உண்மையான தக் லைஃப் அரவிந்த்சாமிதான் என்று கூறி இருக்கிறார். தான் பெரியவன் சிறியவன் என்று அவர் எப்பொழுதுமே நினைக்க மாட்டார். மற்றவர்களிடம் தன்னுடைய அறிவையும் அவர்களிடம் இருந்து அறிவையும் பெற வேண்டும் என்று நினைப்பார். தனக்கு தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார் என அரவிந்த் சாமியை பற்றி கார்த்தி பெரிய அளவில் பேசியிருக்கிறார்.