கார்த்திக்கு அவசர அவசரமாக நடந்த திருமணம்..! பிரபல நடிகைதான் அதுக்கு காரணமாம்…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் கார்த்தி சூர்யாவின் தம்பியான இவர் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வெளிநாட்டிற்கு சென்று படித்து விட்டு வந்த கார்த்தி பருத்திவீரன் படத்தில் ஒரு கிராமத்து ஆளாக நடித்திருந்தது மக்கள் மத்தியில் பிரபலமானது. அதனை தொடர்ந்து பெரும் மாற்றமாக அதற்கு பிறகு பையா படத்தில் நடித்தார்.
பருத்திவீரனுக்கு நேர்மாறாக பையாவில் மாடர்னான பையனாக நடித்தார். பையா படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பையா திரைப்படம் படமாக்கும் பொழுது தமன்னா வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். ஏனெனில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அதிகமாக ஓடுவதில்லை என்று அவருக்கு ஒரு அவபெயர் இருந்தது.
அதனால் இயக்குனர்கள் பலரும் தமன்னாவிற்கு வாய்ப்புகளை கொடுக்காமல் இருந்தனர். இதனால் அவரும் திரும்ப மும்பைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி கார்த்திக்கு ஜோடியாக தமன்னா இருந்தால் சரியாக இருக்கும் என நினைத்தார்.
ஜோடிகளுக்கு இடையே கிசு கிசு:
எனவே தமன்னாவை இந்த படத்தில் நடிக்க வைத்தார். தமிழ் சினிமாவில் தமன்னாவிற்கு பிறகு வாய்ப்புகள் கிடைப்பதற்கும் இந்த திரைப்படம் முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் கார்த்திக்கும் தமன்னாவிற்கும் காதல் இருந்ததாக கிசுகிசுக்கள் உலாவி வந்தன. தமன்னாவிடம் இது பற்றி கேட்கும் போது அவரே சிரித்துக் கொண்டு அதை பற்றி எதுவும் கூறாமல் சென்றார். இதனால் மக்கள் மத்தியிலேயே இந்த புரளி உண்மைதாணோ என்கிற கேள்வி வர துவங்கியது.
கார்த்தியின் அப்பாவான சிவகுமாருக்கு கார்த்தி ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை அதனால்தான் கார்த்திக்கு அப்போது சீக்கிரமாக திருமணம் நடைபெற்றது என்று கூறப்படுகிறது.