15 வருஷமாச்சி!...அண்ணனை கட்டிப்பிடித்து அழுதேன்... நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி பேட்டி....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த வரும் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.
தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படத்தை அவர் ஓடிடியில் ரிலீஸ் செய்தார். ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் முதன் முதலாக ஓடிடியில் வெளியானது இதுதான் முதன்முறை.
அதோடு, இதுவரை அமேசான் பிரைமில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என சூரரைப் போற்று சாதனை படைத்துள்ளது மேலும், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தையுமே விமர்சகர்கள் பாராட்டினர். இப்படம் பல விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது இப்படம் ஹிந்தியில் உருவாகவுள்ளது. இதையும் சூர்யாவே தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி ‘சூரரைப்போற்று படம் பார்த்து விட்டு 15 வருடங்களுக்கு பின் அண்ணனை கட்டிப்பிடித்து அழுதேன்.
அப்படம் அவ்வளவு சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. நம்பிக்கையை அவர்கள் கூறியிருந்த விதம், உறவுகளின் முக்கியத்துவம் எல்லாம் நெகிழ்ச்சியாக இருந்தது. கொரோனா காலத்தில் மக்கள் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது’ என அவர் பேசியுள்ளார்.