Actor Karthi: தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் முலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் கார்த்தி. அதற்கு முன் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். கார்த்திக்கு முன்பாகவே இயக்குனர் அமீருக்கும் சூர்யாவுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது.
நந்தா படத்தில் இருந்தே சூர்யாவிடம் நெருக்கம் காட்டிய அமீர் அவரை வைத்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கினார். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் பருத்திவீரன் படத்தை மீண்டும் சூர்யாவை வைத்து எடுக்க ஆசைப்பட்ட அமீர் கார்த்தியை பார்த்ததும் அவரை வைத்து எடுத்தார்.
இதையும் படிங்க: இனிமேல் கோலிவுட் பக்கமே வரக்கூடாது! நடிகையை கடுமையாக விளாசிய கே ராஜன்
அந்தப் படத்தில் என்னென்ன பிரச்சினைகள் எழுந்தன என அனைவருக்குமே தெரியும். பருத்திவீரன் படத்தை சூர்யாவின் உறவினரான ஞானவேல்ராஜாதான் தயாரித்தார். அதனால் அந்தப் படத்திற்காக ஞானவேல் ராஜா அமீருக்கு ஒரு பெரிய தொகையை கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அது சம்பந்தமாக அமீர் ஞானவேல் ராஜா மீது புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் ஞானவேல் ராஜா அமீரை தகாத வார்த்தைகளால் பேசி அனைவருக்குள்ளும் இருந்த மதிப்பையும் கெடுத்துக் கொண்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு அமீரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார் ஞானவேல் ராஜா. இந்த பிரச்சினை இப்படியே போக சமீபத்தில் தான் கலைஞர் 100 விழா நடந்தது.
இதையும் படிங்க: ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..
அந்த விழாவிற்கு வெற்றிமாறனுடன் அமீர் அருகருகே உட்கார்ந்திருந்தனர். அப்போது சூர்யா வர வெற்றிமாறனை பார்த்ததும் கைகுலுக்கியதோடு அருகில் இருந்த அமீருக்கும் கை கொடுத்தார். உடனே அமீரும் எழுந்து நிற்க இருவரும் கட்டியணைத்துக் கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சங்க செயலாளரான நடிகர் கார்த்திதான் அந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாராம். அப்போது வெற்றிமாறனையும் அமீரையும் கடந்து பல முறை சென்றிருக்கிறார். ஆனால் ஒரு தடவை கூட அமீர் பக்கம் கார்த்தி திரும்பவே இல்லையாம்.இதுதான் அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கொடுக்கிற மரியாதையா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: விஜயகாந்த் 120 முறை பார்த்து ரசித்த அந்த திரைப்படம்!.. வெறித்தனமான ரசிகரா இருந்தி்ருக்காரே!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…