96 மாதிரி இருக்குமா? டைட்டிலேயே தெரியுதே.. கார்த்தியின் அடுத்த பட தலைப்பு இதுதான்

Published on: January 17, 2024
karthi
---Advertisement---

Actor Karthi: கோலிவுட்டில் குறும்பு கார நடிகர் என்றால் அந்த பேருக்கு கச்சிதமாக பொருந்தக் கூடியவர் நடிகர் கார்த்தி. நிஜ வாழ்க்கையில் எப்படியோ தெரியவில்லை. ஆனால் படத்தை பொறுத்தவரைக்கும் மிகவும்  ‘நாட்டி’யான  நடிகர் என்றே சொல்லலாம்.

அந்தளவுக்கு அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் குறும்புத்தனம் கூடவே இருக்கும். கிண்டல், நையாண்டி, நக்கல் என அனைத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அவரின் கேரக்டர் ஒவ்வொரு படங்களிலும் அமைந்திருப்பதுதான் சிறப்பு.

இதையும் படிங்க: நானே நடிகன்… என்னிடமே நடிப்பா… சிவாஜியிடம் மாட்டி கொண்ட பத்திரிக்கையாளர்… நடிகர் திலகம்னா சும்மாவா!..

சூர்யா எப்போதும் சீரியஸான கேரக்டர் என்றால் கார்த்தி எப்போதும் நகைச்சுவை மிக்க கேரக்டர் என்றே சொல்லலாம். இந்த நிலையில் அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது.

கார்த்திக்கு 25வது படமாக அமைந்த ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படு மோசமான விமர்சனத்தை பெற்று அட்டர் ஃப்ளாப் ஆனதுதான் மிச்சம். இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக 96 படத்தை எடுத்த பிரேமுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ராமமூர்த்திக்கும் பாதி கொடுங்க!… வாங்குன சம்பளத்தை பங்கு போட்ட எம்.எஸ்.வி… இப்படியும் ஒரு மனுஷனா!…

அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது  மதுரை பக்கம் நடந்து கொண்டிருக்கிறதாம். இந்தப் படத்தின் மீது கார்த்தி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறாராம். கார்த்தியை விட படத்தின் இயக்குனரான 96 பிரேம் மீது எவ்வளவு எதிர்பார்ப்பு வேண்டுமானால் வைக்கலாம்.

96 படம் எப்பேற்பட்ட கதை. அதை படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்தது. அதனால் அடுத்த படமும் அந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கார்த்தி பிரேம் கூட்டணியில் தயாராகும் அந்தப் படத்தின் தலைப்பு இப்போது வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு ‘மெய் அழகன்’ என வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: திரைப்படம் வேணாம்.. புகைப்படம் போதும்! போட்டோவை போட்டு இளசுகளை உசுப்பேத்திய மாளவிகா

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.