இன்னும் அப்படி ஒரு படத்த பார்க்க முடியுமா? விஜய் படத்த பற்றி பெருமையாக பேசிய கார்த்தி

by Rohini |   ( Updated:2024-11-24 12:08:01  )
karthi
X

karthi

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி .இவர் நடிகராவதற்கு முன்பு உதவி இயக்குனராக ஒரு சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். அமெரிக்காவில் படித்து வந்த கார்த்தி முதன் முதலாக பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய கெட்டப்பை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர் .

ஏனெனில் அமெரிக்காவில் படித்த ஒருவரால் இந்த அளவுக்கு எப்படி நடிக்க முடியும் என மிகவும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எந்த ஒரு வீராப்பும் காட்டாமல் அழகாக அந்த படத்தில் ஒரு லோக்கல் பாயாக நடித்து காட்டினார் கார்த்தி. அது மட்டுமல்ல அவர் பொதுவாகவே எந்த கதாபாத்திரமானாலும் அதை உள்வாங்கிக் கொண்டு தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுவார்.

இதையும் படிங்க: அடுத்த 2 வருஷத்துக்கு அம்மணி ரொம்ப பிஸி!.. மீண்டும் ஒருமுறை சவுத் குயின்னு நிரூபிச்ச திரிஷா?!…

தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. இவருடைய படங்களில் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், கைதி போன்ற படங்கள் காலம் காலமாக நின்னு பேசும் படங்களாக இருக்கும். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு இந்த படங்களில் அனைவரையும் கவர்ந்தது.

vijay_movie

vijay_movie

இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் வணிகரீதியாக வரவேற்பை தரவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவு மக்களை கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவர் பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துக் கொண்டு வருகிறார். இவர் படங்களை எடுத்த பெரும்பாலான இயக்குனர்கள் புதுமுக இயக்குனர்களாகவே இருப்பது ஆச்சரியம் .

இதையும் படிங்க:போற போக்குல இப்படி கலாய்ச்சிடீங்களே பாய்!… சல்மான்கான் சொன்னது யாரென்னு தெரியுதா?!…

இந்த நிலையில் நேற்று நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் மிஸ் யூ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கார்த்தி பேசி இருந்தார். அதில் விஜயின் ஒரு படத்தை மிகப் பெருமையாக பேசினார் .என்னுடைய கல்லூரி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்தமான படமாக இருந்தது விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படம் தான். அந்த மாதிரி ஒரு ரொமான்டிக்கான படத்தை இனிவரும் காலங்களில் நாம் பார்க்கவே முடியாது என்ற வகையில் பேசி இருந்தார் கார்த்தி. இதன் மூலம் விஜய் ரசிகர்கள் கார்த்திக்கு சல்யூட் அடித்து வருகின்றனர்.

Next Story