ஜாலி போலீசாக வைப் பண்ணும் கார்த்தி!… வா வாத்தியாரே டீசரே சும்மா தாறுமாறா இருக்கே?!..

Published on: November 13, 2024
---Advertisement---

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் வா வாத்தியாரே திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட்டு திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மெய்யழகன்.

இதையும் படிங்க: சொல்ல முடியாது!… விஜய் படத்தின் பார்ட் 2-ல எஸ்கே நடிக்கவும் வாய்ப்பிருக்கு?!… வேற லெவல்!…

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்.

கார்த்தியின் 26வது திரைப்படமாக இப்படம் உருவாகியிருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடித்திருக்கின்றார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தது. மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் நடிகர் ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் மூலமாக கீர்த்தி ஷெட்டி தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகின்றார். இந்த திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி மாதம் திரைக்கு கொண்டு வருவதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கின்றது. அதில் நடிகர் கார்த்திக் போலீஸ் கெட்டப்பில் செம ஜாலியாக என்ட்ரி கொடுக்கின்றார் .

மேலும் டீசர் முழுவதும் எம்ஜிஆர் ரசிகனாக வைப் பண்ணிக்கொண்டு ஜாலியான ஒரு கதாபாத்திரமாக காட்சியளிக்கின்றார். மேலும் சத்யராஜ் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் காட்டப்பட்டிருக்கின்றார். இந்த டீசர் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் போலீஸ் கதாபாத்திரத்தில் செம கூலாக நடித்து இருக்கின்றார் கார்த்தி என்று கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: Sivakarthikeyan: போடு.. எச்.வினோத்தையும் மடக்கி பிடித்த சிவகார்த்திகேயன்.. செம மேட்டரா இருக்கே

இவர்கள் நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் அந்தளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில் இப்படம் மூலமாக கார்த்தி கம்பேக் கொடுப்பாரா? என்று பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். மேலும் நடிகர் கார்த்தி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.