சிவாஜி கூட நடிக்க மாட்டேன்!. தெறித்து ஓடிய கார்த்திக்!.. அவர் சொன்ன காரணம் இதுதான்!..
Actor karthik: அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர்தான் கார்த்திக். பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் இவர். முதல் படமே வெற்றி என்பதால் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். துவக்கத்தில் மற்ற நடிகர்களை போல காதல் மற்றும் சண்டை காட்சியுள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்தார் கார்த்திக்.
ஆனால், ராஜேஸ்வர், ஆர்.வி.உதயகுமார் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்தார். அப்படி வெளியான கிழக்கு சீமையிலே, அமரன் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். கார்த்திக்கிடம் இருக்கும் ஒரே பிரச்சனை அவரின் பழக்க வழக்கங்கள்தான்.
இரவில் தாமதமாக தூங்கி அடுத்த நாள் 12 மணிக்கு மேல் எழுந்திருப்பது கார்த்திக்கின் பழக்கம். பொதுவாக சினிமா ஷூட்டிங் காலை 7 மணிக்கு துவங்கிவிடுவார்கள். கார்த்தி தாமதமாக வருவார். சில நாட்கள் வரவே மாட்டார். இதனால், பல படங்களின் படப்பிடிப்புகள் நின்று போனது.
இதனால் கோபமடைந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கார்த்திக்கை வைத்து படமெடுப்பதை குறைத்துகொண்டார்கள். ஒருகட்டத்தில் பட வாய்ப்புகளை கார்த்திக் இழந்தார். அவர் விட்ட இடைவெளியில்தான் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் உள்ளே புகுந்து மார்க்கெட்டை பிடித்துக்கொண்டனர்.
விக்ரமன் இயக்கத்தில் கார்த்திக் நடித்து வெளியான படம்தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய விக்ரமன் கார்த்திக் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். ‘என்னால் காலை 7 மணிக்கெல்லாம் வரமுடியாது சார். 11 மணிக்குதான் வருவேன். சிவாஜி சார் கூட நடிக்க வாய்ப்பு வந்த 4 படங்களை 7 மணிக்கு போக முடியாது என்கிற காரணத்துக்காவே வேண்டாம் என சொல்லி இருக்கிறேன்’ என என்னிடம் சொன்னார்.
காலையில் தாமதமாக வந்தாலும் தனது காட்சிகளை நடித்து கொடுத்துவிடுவார். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் இருந்து நடித்து கொடுத்துவிட்டு போவார். அவருக்கு காலையில் எந்திருப்பதுதான் பிரச்சனை’ என சொல்லியிருந்தார் விக்ரமன்.