Cinema History
என் படங்கள் ஓடாமல் போனதுக்கு காரணம் இதுதான்!.. கண்டுபிடிக்க 3 வருஷம் ஆச்சி!. கார்த்திக் கொடுத்த பேட்டி!..
60களில் பல படங்களிலும் நடித்து ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த முத்துராமனின் மகன்தான் நடிகர் கார்த்திக். பாரதிராஜா கண்ணில் பட்டு அவர் இயக்கி வந்த அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். அதன்பின் தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தது.
ஒருகட்டத்தில் இளம் பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோவாக கார்த்திக் மாறினார். அதற்கு மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் படத்தில் அவருக்கு கிடைத்த அந்த துறுதுறு வேடம்தான் காரணம். ஜெமினி கணேசனை காதல் மன்னன் என சொன்ன ரசிகர்கள் கார்த்திக்கை காதல் இளவரசன் என அழைத்தனர்.
இதையும் படிங்க: ஷூட்டிங் போய் தங்க இடமில்லாமல் மொட்டை மாடியில் தூங்கிய ரஜினி!.. நடந்தது இதுதான்!
தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகர்களில் கார்த்திக்கும் ஒருவர். பல திரைப்படங்களில் அதை நிரூபித்திருக்கிறார். 80,90களில் ஆக்டிவாக இருந்த இவர் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட்டை இழந்தார். அதற்கு காரணம் அவர் மட்டுமே. அதிகாலை சிக்கிரம் எழுந்து காலை 7 மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு போவது என்பது கார்த்திக்கு எப்போதும் செட் ஆகாது.
இரவு தாமதமாக படுத்து அடுத்தநாள் மதியம் எழுவதுதான் அவரின் ஸ்டைல். இதனாலேயே இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை வைத்து படமெடுக்க யோசித்தனர். ஆனால், சுந்தர் சி போன்ற சில இயக்குனர்கள் அவரை வைத்து உள்ளத்தை அள்ளித்தா போன்ற காமெடி படங்களை எடுத்து ஹிட் கொடுத்தனர்.
அந்த படத்திற்கு பின் ஒரு ரவுண்டு வந்தார் கார்த்திக். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் வரவால் கார்த்திக்கு மார்க்கெட் போனது. திறமையான நடிகராக இருந்தும் அதை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இப்போது அவரின் மகன் கௌதம் சினிமாவில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த 100 சதவீதம் அஜித் செல்லவே மாட்டார்… பொங்கி எழுந்த விமர்சகர்…
ஆரம்பகாலத்தில் தனது படங்கள் ஓடாதது பற்றி 30 வருடங்களுக்கு முன்பே பேசிய கார்த்திக் ‘நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு வயது 20. ஆனால், 15 வயதுக்குரிய தோற்றம்தான் எனக்கு இருந்தது. முத்துராமனின் மகன் என்பதே எனக்கு எமனாகிப்போனது. ஏனெனில், எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நான் சுலபமாக நடித்துவிடுவேன் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவர்களாகவே நினைத்துகொண்டார்கள்.
அப்படி எனக்கு வந்த வாய்ப்புகளை மறுக்கும் துணிச்சலும் எனக்கு அப்போது இல்லை. எனவே, அந்த கதாபாத்திரங்களில் சரியாக நடிக்க முடியாமல் நான் தினறினேன். இதையெல்லாம் புரிந்துகொள்ளவே 3 வருடங்கள் ஆனது. அதன்பின்னர்தான் எனக்கு பொருத்தமான வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினேன்’ என கார்த்திக் சொல்லி இருக்கிறார்.