ரொம்ப நாளைக்கு பிறகு வெளியே வரும் கார்த்திக்! உண்மையிலேயே அவருக்கு என்னதான் ஆச்சு?

by Rohini |   ( Updated:2024-04-07 06:16:19  )
karthick
X

karthick

Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர்தான் கார்த்திக்.முரளி என்ற தன் பெயரை கார்த்திக் என இந்தப் படத்தின் மூலம்தான் மாற்றிக் கொண்டார். இந்தப் படத்திற்கு நடிகரை தேடிக் கொண்டிருக்க முத்துராமன் மகன் ஒருவர் இருக்கிறார் என பாரதிராஜாவை அவரது உதவியாளர் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

தன் மகனை முதலில் நடிக்க வைக்க முத்துராமன் மறுத்தாலும் அதன் பிறகு ஒப்புக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர் கூட்டத்தை கூட்டி அவர்கள் முன் என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறியே கார்த்திக்கை பாரதிராஜாவிடம் ஒப்படைத்தாராம் முத்துராமன். ஆரம்பத்தில் பல தோல்விகளை கண்டாலும் ‘வருஷம் 16’ மற்றும் ‘மௌன ராகம்’ போன்ற படங்கள் கார்த்திக் மீது ஒரு பெரிய க்ரேஷையே ஏற்படுத்துகின்றன.

இதையும் படிங்க: 20 முறை சூர்யாவுடன் மோதிய சியான் விக்ரம் படங்கள்!… அதிக தடவை ஜெயித்த ஹீரோ யாரு தெரியுமா?..

சினிமாவில் ஒரு அந்தஸ்தை அடைந்த பிறகு குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் போவது, குடிப்பது என தயாரிப்பாளர்களை அலைய வைத்திருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா கூட ஒரு பத்திரிக்கையில் ரஜினி , கமல் இவர்களுக்கு பிறகு கார்த்திக்தான் அடுத்த இடத்திற்கு வருவார் என்று பதிலளித்திருந்தார்.

அந்தளவுக்கு கார்த்திக் மீது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் அவரே கெடுத்துக் கொண்டார் என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். இப்படித்தான் ஒரு சமயம் கார்த்திக், அஜித் சேர்ந்து நடிக்கும் போது கார்த்திக் படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததாகவும் அப்போது கோபமடைந்த படக்குழு ஒரு ரவுடி மூலமாக கார்த்திக்க்கை கடத்தி வைத்து இரண்டு நாள்கள் நடுக்கடலில் கட்டி வைத்ததாகவும் ஒரு செய்தி அப்போது வைரலானதாம்.

இதையும் படிங்க: காத்திருந்து குறி வச்ச மாதிரி தெரியுது.. ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா

ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தெரியாது என செய்யாறு பாலு கூறினார். இதற்கிடையில் பல மாதங்களாக பொது வெளியில் வராமல் இருந்தார் கார்த்திக் .சித்ரா லட்சுமணனிடம் ரசிகர்கள் பலர் கார்த்திக்கை பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அவருக்கும் என்னதான் ஆச்சு கார்த்திக்கு என தெரியவில்லை என பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்வதற்காக கார்த்திக் வர இருக்கிறார் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அவரை பார்க்கவாவது ஒரு திரளான கூட்டம் வரும் என்று சொல்லப்படுகிறது.

Next Story