ஃபுல் மப்பில் அறைக்கதவை திறக்காத கார்த்திக்.. அவரின் மனைவி என்ன செய்தார் தெரியுமா?..
திரையுலகை பொறுத்தவரை கெட்ட பழக்கங்களை பழகுவது என்பவது மிகவும் சாதரண விஷயம் ஆகும். படப்பிடிப்பு முடிந்துவிட்டால் ஜாலியாக நண்பர்கள் அல்லது படப்பிடிப்பு குழுவினருடன் மது அருந்தும் பழக்கம் பல நடிகர்களுக்கும் இருக்கிறது. அல்லது தனியாக மது அருந்தும் நடிகர்களும் இருக்கிறார்கள். மதுபோதையோடு படப்பிடிப்புக்கு போன நடிகர்கள் கூட இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக பார்க்கப்பட்டவர் நடிகர் கார்த்திக். 80,90 களில் பல ஹிட் படங்களில் நடித்தவர். இவர் நடித்தால் மினிமம் கேரண்டி என்பதால் இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால், இவரிடம் உள்ள ஒரே பிரச்சனை என்னவெனில், படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார்.
மதுப்பழக்கம் உள்ள கார்த்திக் விடிய விடிய மது அருந்திவிட்டு பகலில் தூங்கும் பழக்கம் உள்ளவர். படப்பிடிப்பு காலை 7 மணிக்கு துவங்கும். இவர் மதியம் 2 மணிக்குதான் படப்பிடிப்புக்கு வருவாராம். சுந்தர் சி போல இவரை கையாள தெரிந்த இயக்குனர்கள் அவரை சமாளித்து படங்களை இயக்கி வந்தனர்.
ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மது அருந்துவிட்டு தூங்கிவிட்டார் கார்த்திக். படப்பிடிப்பு குழுவினர், இயக்குனர் என யார் தட்டியும் அவர் அறைக்கதவை திறக்கவே இல்லை. பதறிய படக்குழுவினர் சென்னையில் இருந்த அவரின் மனைவிக்கு தொலைப்பேசியில் தகவல் கொடுத்தனர். அவரின் மனைவி ரோகினி சென்னையில் இருந்து ஊட்டி சென்று அவர் கதவை தட்டிய பின்னரே கார்த்திக் எழுந்து வந்தாராம். அதன்பின் சில மணி நேரங்கள் கழித்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.
இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மல்கோவா மாம்பழம் மலைப்பா இருக்கு!.. மறைக்காம காட்டும் மாளவிகா மேனன்…