சில நடிகர்களுக்கு சுலபமாக வாய்ப்பு கிடைத்துவிடும். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்துவிடும். ஆனால், தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தால் மட்டுமே திரையுலகில் நீடித்து நிற்கமுடியும். ஹிட் படங்களில் நடிக்காவிட்டால் தயாரிப்பாளர்கள் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பல திரைப்படங்களில் நடித்த முத்துராமனின் மகன் கார்த்திக். பாரதிராஜா கண்ணில்படவே அவரை தான் இயக்கிய ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகப்படுத்தினார். முதல் படமே சூப்பர் ஹிட். தொடர்ந்து பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் எல்லா படங்களிலும் நடித்ததால் தொடர் தோல்வியை சந்தித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் உட்காரவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. ஆனால், முதலில் அந்த வாய்ப்பை கார்த்திக் ஏற்கவில்லை.
இந்த படத்தில் வில்லனாக நடித்தால் அடுத்து உங்களை ஹீரோவாக போட்டு ஒரு படத்தை நாங்கள் தயாரிப்போம் என ஏவிஎம் நிறுவனம் வாக்கு கொடுக்க கார்த்திக் ஒப்புக்கொண்டு அப்படத்தில் நடித்தார். ரஜினியின் மகளை திருமணம் செய்து கொண்டு அவருக்கு எதிராகவே செயல்படும் வேடத்தில் கார்த்தி நடித்தார். படமும் சூப்பர் ஹிட். அந்த படத்திற்கு பின் மீண்டும் கார்த்திக்கு வாய்ப்புகள் வந்து பெரிய நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…