அந்த தயாரிப்பாளருக்கு மட்டுமே கார்த்திக் அடங்குவார்!.. அது யார் தெரியுமா?!...
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் கார்த்திக். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 80,90 களில் இளம்பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர். பல ஹிட் படங்களை கொடுத்தவர். குறிப்பாக சிறந்த நடிகராக விளங்கியவர்.
திரையுலகில் இன்னும் மேலே சென்றிருக்க வேண்டியவர் தன்னுடையை நடவடிக்கைகளால் பெயரை கொடுத்துக்கொண்டார். அதாவது, படப்பிடிப்பு சரியாக செல்ல மாட்டார். இவருக்காக படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் காத்து கொண்டிருந்தால் இவரால் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பார். காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வர சொன்னால் மதியம் 2 மணிக்கு போவார். இதனாலேயே அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கினர். அதனால், சிறந்த நடிகராக இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து போனது. தற்போது அவரின் மகன் கவுதம் கார்த்திக் நடிகராகிவிட்டார்.
ஆனால், கார்த்திக் மதிக்கும் ஒரு தயாரிப்பாளர் இருந்தார். அதுதான் சங்கிலி முருகன். தமிழ் சினிமாவில் இவர் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். பல திரைப்படங்களிலும் நடித்தும் இருக்கிறார். கார்த்திக்கை வைத்து அதிக திரைப்படங்களை தயாரித்தவர் இவர். இவர் தயாரிக்கும் படம் எனில் கார்த்திக் சரியாக படப்பிடிப்புக்கு போவாராம். அதற்கு காரணம் கார்த்திக்கின் அப்பாவும் சங்கிலி முருகன் மீது நல்ல மாரியாதை வைத்திருந்தாராம். இந்த தகவலை பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கலைஞரின் வசனம் பெரிதா? சிவாஜியின் உச்சரிப்பு பெரிதா? இது ஒரு ஆரோக்கிய போட்டி…மக்களின் கருத்து இதோ..!