கூட்டத்த பாத்து ஓட்டு வரும்னு நினைக்கக் கூடாது! விஜயை வடிவேலுவாக்கிய கருணாஸ்
Vijay Karunas: விஜயின் அரசியல் குறித்து நடிகர் கருணாஸ் ஒரு பேட்டியில் அவருடைய கருத்தை பகிர்ந்து இருக்கிறார். எம்ஜிஆர் உடன் விஜயை ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் அந்தக் கால அரசியல் வேறு. இப்ப உள்ள அரசியல் வேறு. விஜய் சொல்வது மாதிரியோ நினைப்பது மாதிரியோ அரசியல் என்பது அவ்வளவு எளிதல்ல .
எம்ஜிஆரின் அரசியலை ஆரம்பத்தில் இருந்து பார்க்க வேண்டும். அவருடைய உழைப்புகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். எம்ஜிஆருக்கு வருகிற கூட்டம் மாதிரி விஜய்க்கும் வருகிறது. அப்போ விஜய் கண்டிப்பாக அரசியலில் அவர் நினைத்த இடத்தை அடைவார் என்று சொல்வதெல்லாம் முட்டாள்தனம். வடிவேலு ஒரு பிரச்சாரத்திற்காக போகும் சமயத்தில் எக்கச்சக்க கூட்டம் கூடியது.
இதையும் படிங்க: 1987ல் கடும் போட்டி… விஜயகாந்த், கமல், ரஜினி யாருக்கு வெற்றி?
ஆனால் அந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறியதா என்றால் இல்லை. அவரைப் பார்க்க அந்த கூட்டம் கூடியது. அவ்வளவுதானே தவிர அந்தக் கூட்டத்தை நம்பி ஓட்டு வந்துவிடும் என நினைக்க கூடாது. உங்களை வேடிக்கை பார்க்க வருவது வேறு. ஓட்டு போடுவது என்பது வேறு. ஓட்டு ஒருவனை போட வைப்பது என்பது சின்ன விஷயம் கிடையாது.
வேற ஒரு சின்னத்துக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு பழக்கப்படுத்திய ஒருவனை வேறொரு சின்னத்துக்கு மாற்றி போட வைப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் கிடையாது . இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரிய மாஸ் நடிகராக இருக்கிறார் விஜய். அவரைப் பார்ப்பதற்கு கூட அந்த கூட்டம் கூடுமே தவிர அது ஓட்டாக மாறுமா என்றால் சந்தேகம் தான் என்பதைப் போல் கூறியிருக்கிறார் கருணாஸ்.
அதைப்போல அறிஞர் அண்ணா 1948 - 49களில் கட்சியை ஆரம்பித்து அவர் முதலமைச்சர் ஆவதற்கு கிட்டத்தட்ட பத்து வருட காலம் அவர் காத்திருக்க வேண்டி இருந்தது. இன்னொரு விஷயம் கருத்தியலாக விஜய் யார் என்பதை இன்றுவரை சொல்லவில்லை. அறிஞர் அண்ணாவைப் பொறுத்த வரைக்கும் நான்கு சித்தாந்தங்களை வைத்து ஊர் முழுக்க பேசி அதிலிருந்து மாறாமல் இன்றுவரை அறிஞர் அண்ணா என்றால் இந்த கொள்கைதான் என பேசிக் கொண்டிருக்கிறோம் .
இதையும் படிங்க: கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
அதைப்போல் நீங்கள் யார்?உங்கள் கொள்கைகள் என்ன என்பதை முதலில் வெளியே வந்து சொல்லுங்கள். இதையெல்லாம் தாண்டி மக்கள் பணம் பெற்று வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்கள். அதில் அவர்கள் ஆக்ரோஷமாக இருக்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பக்கத்து தெருவில் ஓட்டுக்கு காசு கொடுத்தான். என் தெருவுக்கு காசு கொடுக்கல என போராடி தெருவுக்கு வந்த தமிழக மக்களை சாதாரணமா நினைக்கக் கூடாது.
இது வருத்தப்படுகிற விஷயமாக இருந்தாலும் பெருமையா சொல்கிற அளவுக்கு மக்கள் அந்த நிலைமைக்கு போய்விட்டார்கள். அதனால் எடுத்த உடனேயே தேரை இழுத்து விட முடியுமா என்றால் முடியாது. நாலா பக்கமும் உடையும். சிதறும். கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி தான் கொண்டு வர வேண்டும் . நடிகர்கள் எனும் பார்க்கும் போது விஜய் பெரிய நடிகர். உதயநிதி சிறிய நடிகர்.
இதையும் படிங்க: இசை மட்டுமா இவருக்கு அத்துப்புடி?.. ஏஆர் ரஹ்மானின் அறியாத இன்னொரு பக்கம்
ஆனால் வருங்காலத்தில் போட்டி எனும் வரும் போது அரசியலில் உதயநிதி பெரிய ஆள். விஜய் சிறிய ஆளாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் உதயநிதியை பொருத்தவரைக்கும் பாரம்பரியமாக அரசியல் என்பது ஊரி போய் கிடைக்கிறது. அதனால் அவர்களை சும்மா எடை போட்டுவிட முடியாது என கருணாஸ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.