தமிழ் சினிமாவில் 80களில் நகைச்சுவையில் கவுண்டமணி செந்தில் இவர்களின் கூட்டணி தான் மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்திருந்தது. இவர்களின் கால்ஷீட் கிடைக்காமல் ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என திண்டாடிக் கொண்டு வந்தனர். அந்த அளவுக்கு எல்லா ஹீரோக்களின் படங்களிலும் கவுண்டமணி செந்தில் இவர்கள் தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டு வந்தனர். ஆனால் இவர்களுடனே பயணித்த மற்றும் ஒரு நகைச்சுவை நடிகரை நாம் மறந்து விட்டோம்.
ஆப்பிரிக்க அங்கிளாக கலக்கியவர்
அவர்தான் பிரபல நடிகர் கருப்பு சுப்பையா. ஆனால் கருப்பு சுப்பையா கிட்டத்தட்ட 60 இலிருந்து தன்னுடைய சினிமாவின் பயணத்தை ஆரம்பித்தவர். எம்ஜிஆர் சிவாஜி ஜெய்சங்கர் என அந்த கால நடிகர்களுடன் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியவர். ஆரம்பத்தில் கருப்பு சுப்பையா வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். கட்டுமஸ்தான உடம்பை கொண்டு மிரட்டி வந்தார்.
ஆனால் அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டது என்னவோ கவுண்டமணி செந்தில் உடன் நடித்த பிறகுதான். பெரும்பாலான படங்கள் கருப்பு சுப்பையாவிற்கு கவுண்டமணியின் காம்போவிலேயே வெளிவந்தன. ஒரு காட்சியில் கூட செந்தில் யாருன்னே இவரு ?எனக் கேட்க அதற்கு கவுண்டமணி “இவர தெரியல இவர் தான் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்” என கூற அரங்கமே சிரிப்பு மழையாக மாறியது.
அண்டா இல்லை குண்டாதான் இருக்கிறது
அதேபோல பெரிய மருது என்ற திரைப்படத்தில் பாத்திரம் பூசும் கவுண்டமணியிடம் மூன்று அண்டாவிற்கு டி எம் பூச எவ்வளவு என கேட்பார் அதைக் கேட்டதும் கவுண்டமணிக்கு “இன்னைக்கு ஒருத்தன் வசமா மாட்டிட்டாயா” என்று நினைப்பது போல யோசிப்பார் .ஆனால் கருப்பு சுப்பையாவோ “அந்த மூன்று அண்டாவும் அடகு கடையில் இருக்கு வேண்டுமென்றால் இந்த குண்டாவிற்கு ஈயம் பூசித்தாருங்கள்” என கேட்பார் .உடனே காண்டாகிய கவுண்டமணி அவரை போட்டு அடி அடி என்று அடித்து அவர் உடம்பு முழுவதும் ஈயத்தை வைத்து பூசி அனுப்பி விடுவார்.
இப்படி பல படங்களில் கவுண்டமணியுடனான காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் மிகவும் சிரிக்க வைத்தது. இந்த அளவுக்கு பேர் வாங்கிய கருப்பு சுப்பையா கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேலாக அதாவது சினிமா வேறொரு பரிணாமத்தை நோக்கி வளர்ச்சி அடைய ஆரம்பித்ததால் கருப்பு சுப்பையாவின் வாய்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது.
விதி சும்மா விடுமா
அதனால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவித்தாராம் கருப்பு சுப்பையா. 1997 ஆம் ஆண்டு வெளியான தெம்மாங்கு பாட்டுக்காரன் என்ற திரைப்படம் தான் கருப்பு சுப்பையா நடித்த கடைசி திரைப்படம். அதன் பிறகு நடிகர் மனோபாலா கருப்பு சுப்பையா பற்றி ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை பகிர்ந்திருந்தார். அதாவது வறுமையின் காரணமாக தெரு நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தாராம் கருப்பு சுப்பையா. அந்த நாடகத்தில் உடம்பு முழுவதும் பெயிண்டை பூசிக்கொண்டு நடிப்பது போன்ற காட்சியாம் .அதனால் அந்தப் பெயிண்ட் உடல் முழுவதும் பரவி அடுத்த நாளே கருப்பு சுப்பையா இறந்து விட்டாராம். ஆனால் அவருடைய குடும்பம் என்ன ஆனது அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை பற்றி ஒரு தகவலும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கவுண்டமணி சிவகார்த்திகேயன் கூட்டணியில் அடுத்த படம்!.. மாஸ் அப்டேட்டா இருக்கே…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…