விஜய் படத்தின் சிடி-ஐ உடைத்து போட்ட கவின்!. சினிமா மேல் அவ்வளவு லவ்வா!..

by சிவா |
kavin
X

#image_title

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். அவருக்கு பின்னால் நடிக்க வந்த இளம் நடிகர்கள் பலரும் அவரின் ரசிகர்களாக இருக்கிறார்கள். சில இளம் இயக்குனர்கள் கூட அவரின் ரசிகர்களாக இருக்கிறார்கள். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து பெண் ரசிகைகளை பெற்றார்.

அசத்தலான நடனம் மற்றும் ஆக்சன் காட்சிகளில் நடித்து ஆண் ரசிகர்களை பெற்றார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது. அதன்பின் பல வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக கில்லி படம் தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூலை பெற்ற திரைப்படமாகும்.

இதையும் படிங்க: ‘கோட்’ வெற்றிக்கு மணிரத்னத்தை ஃபாலோ செய்கிறாரா VP? இது என்ன புதுசா இருக்கு?

இப்போது கோலிவுட்டின் உச்ச நடிகராக இருக்கிறார் விஜய். அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவரோ வினோத் படத்தில் நடித்து முடித்துவிட்டு அரசியலுக்கு போகப்போறேன் என சொல்லி இருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். விஜயை ரசித்தவர்கள் நடிகர் கவினும் ஒருவர். இவர் விஜய் டிவியில் சீரியலில் நடித்து பின்னால் சினிமாவில் நுழைந்தவர்.

Thalaiva

Thalaiva

லிப்ட், டாடா என சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இப்போது பெக்கர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். மொத்தத்தில் வளரும் ஒரு இளம் நடிகராக மாறியிருக்கிறார் கவின். இவரை பற்றி விஜய் டிவி பிரபலமும், நடிகருமான ரியோ ஊடகம் ஒன்றில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

தலைவா படம் தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. ஆனால், வேறு மாநிலங்கள் படம் ரிலீஸாகிவிட்டதால் திருட்டு விசிடி மூலம் படம் வந்துடுச்சி. சரி நாங்க எல்லோரும் சேர்ந்து படம் பார்க்கலமா என நினைத்து கவினையும் அழைத்தோம். ஆனால், பைரசியில் படம் பார்ப்பது தவறு. எனக்கு பிடிக்காது என சொல்லி அந்த சிடியை உடைத்து போட்டுவிட்டான் கவின். அந்த அளவுக்கு சினிமா மேல காதல்’ என சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: கங்குவா கதை லீக் ஆகாம இருக்க படக்குழு செய்த வேலை!. இப்படியெல்லாம் யோசிப்பாங்களா!..

Next Story