நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த கவின்!.. வைரலாகும் திருமண புகைப்படம்!…

Published on: August 20, 2023
kavin
---Advertisement---

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து வந்தவர் கவின். சின்னத்திரை சீரியல் மூலம் இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள். அப்படியே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பிரியா பவானி சங்கரும், இவரும் காதலித்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அது பிரேக்கப்பில் முடிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் இருந்தவரை அந்த சீசனே கலகலப்பாக போனது. இவரும், நடன இயக்குனர் சாண்டியும் ஜோடி போட்டு அந்நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கினர். ஒருபக்கம், அந்த வீட்டில் இருந்தபோது லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையும் படிங்க: சிவாஜி படப்பிடிப்பில் ரஜினி செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடன கலைஞர்கள்!…

ஆனால், அந்த காதலும் கவினுக்கு கை கூடவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அந்த காதலும் பிரேக்கப் ஆனது. அதன்பின் முழுக்க முழுக்க சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். லிஃப்ட், டாடா ஆகிய படங்களில் நடித்தார். இதில் டாடா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வருகிறது.

kavin

சமீபத்தில் கவின் தனது நீண்ட நாள் தோழி மோனிகாவை திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியானது. அதை கவினும் மறுக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை கவினுக்கும், மோனிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில், புகழ் உட்பட விஜய் டிவி பிரபலங்கள், கவினின் நண்பர்கள் மற்றும் உறவி்னர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kavin

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.