Cinema News
கவினுக்கு ஓவர் தலைக்கனமா?.. எல்லாத்துக்கும் காரணம் நயன்தாரா மேனேஜராமே!.. அடக்கொடுமையே..
நடிகர் கவின் தனது மேனேஜர் மூலமாக சினிமாவில் சில பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்.
நடிகர் கவின்:
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவி மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தேடி கொடுத்தது. இந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியின் மூலமாக லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது.
இதையும் படிங்க: லொள்ளு சபா மனோகர் நடிக்க வேண்டிய படத்தில் விஜய் சேதுபதி!.. என்னப்பா சொல்றீங்க?!..
அடுத்தடுத்த வெற்றி:
லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா என்கிற திரைப்படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மாறினார் நடிகர் கவின். அதனை தொடர்ந்து ஸ்டார் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கடைசியாக பிளடி பெக்கர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பிளடி பெக்கர் தோல்வி:
கவின் நடிப்பில் நெல்சன் தயாரிப்பில் உருவான பிளடி பெக்கர் திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் நடிகர் கவின். இருப்பினும் இந்த திரைப்படம் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. பிளாக் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கவினுக்கு எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு கை கொடுக்கவில்லை.
நடிகர் கவின் லைன் அப்:
நடிகர் கவின் தற்போது சதீஷ் மாஸ்டர் இயக்கத்தில் கிஸ் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அடுத்ததாக மாஸ்க், ஹாய் என்று மூன்று திரைப்படங்கள் இவரது கைவசம் இருக்கின்றது. இந்த படங்கள் அனைத்தும் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றார். இந்த மூன்று படங்களும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வருவதால் படு பிசியாக நடித்து வருகின்றார்.
மேனேஜர் பிரச்சனை:
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக கவின் மாறி இருப்பதால் அவரிடம் கதை கூறுவதற்கு ஏராளமான இயக்குனர்கள் தயாராக இருக்கிறார்கள். நடிகர் கவினுக்கு குபேரன் என்பவர் மேனேஜராக இருந்து வருகின்றார். இவர் தான் நயன்தாராவுக்கும் மேனேஜர். இந்நிலையில் நடிகர் கவினின் அனைத்து படங்களின் டேட்டுகளையும் கதைகளையும் கேட்டு வருகின்றார்.
இதையும் படிங்க: ஓடிடி-ல ரிலீஸ் பண்ணக்கூடாது!.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு.. அமரன் படத்துக்கு வந்த புது சிக்கல்..
இவரிடம் யாராவது வந்து நடிகர் கவினை சந்திக்க வேண்டும் என்று கூறினால் அதற்கு சரியாக பதில் அளிக்காமல் போன் அடித்தால் எடுக்காமலும், மெசேஜ் செய்தால் அதனை பார்த்தும் ரிப்ளை செய்யாமல் இருந்து வருகிறாராம். இந்த செயல் நடிகர் கவினுக்கு தமிழ் சினிமாவில் தற்போது ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தி இருக்கின்றது.
அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால் நடிகர் கவின் தலைகனத்துடன் நடந்து வருகின்றார் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இதற்கு முக்கிய காரணம் அவரது மேனேஜர் தான் என்று சமூக விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.