நடிச்சதுக்கு சம்பளம் கேட்டேன்!.. தப்பா?.. சந்தானம் படத்தில் பிரபல நடிகர் அனுபவித்த வேதனை!..
சினிமாவில் சாதிக்க வேண்டுமென்றால் எத்தனையோ இடர்பாடுகளை கடந்து தான் வரவேண்டியிருக்கிறது. நடிகைகள் என்றால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையே வேறு. இதுவே நடிகர் என்றால் அதுவும் புதுமுக நடிகர்கள் என்றால் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேற.
இன்னும் சொல்லப்போனால் பிரபலமான நடிகர்களே இதுவரைக்கும் எதாவது ஒரு வகையில் பிரச்சினைகளை சந்தித்து தான் வருகின்றனர். துணை நடிகர்கள், சிறு நடிகர்கள் என சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள போக வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் பெரும்பாலான படங்களில் நகைச்சுவையில் கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகர் கிங்காங். இவர் பெரும்பாலான படங்களில் துணை நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 80களில் இருந்தே இவரது திரைப்பயணம் நீண்டது.
அவ்வப்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்துக் கொண்டு வருகிறார். அதுவும் விஜய் டிவியில் பெரும்பாலும் இவரை காணமுடிகிறது. மேலும் நலிந்த நடிகர்களுக்கும் இவரால் முடிந்த அளவு உதவிகளை செய்து கொண்டும் வருகிறார்.
இவர்தான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் பட்ட வேதனையை கூறியிருக்கிறார். ஆனாலும் அதை மிகவும் நாகரீகமாக கூறினார். யார் மேலேயும் குறை சொல்ல முடியாது என பெருந்தன்மையாக கூறினார். அதாவது இவர் இப்போது சந்தானம் நடிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
இதையும் படிங்க : விட்டிருந்தா அப்பயே செத்துருப்பேன்..- தளபதி தினேஷ்க்கு நடக்கவிருந்த விபரீதம்!.
அப்போது அந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் கேட்டாராம். ஆனால் அவர்கள் இவர் நடிக்கவே இல்லை என்று கூறினார்களாம். இருந்தாலும் இவர் தான் நடித்ததற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் காட்டினாராம். ஆனால் அவர்கள் நம்பவே இல்லையாம். இது தனக்கு மிகவும் வேதனையாக இருந்தது எனவும் இதை பற்றி யாரிடம் சொல்லமுடியும் என்றும் வருத்தத்துடன் கூறினார்.