வீடியோவில் பேசியதை நிஜமாக்கிய ரஜினி.. கிங்காங்கிற்காக இறங்கி வந்த சூப்பர் ஸ்டார்

by Rohini |   ( Updated:2025-04-23 08:50:51  )
king_rajini
X

king_rajini

Rajini:படங்களில் நடிக்கும் துணை நடிகர்களின் பெரும்பாலான கனவு என்ன தெரியுமா? பெரிய பெரிய டாப் நடிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும், அவர்களுடன் இணைந்து ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அப்படி பல பேரின் கனவு நிஜமாகி இருக்கிறது. சில பேரின் கனவு கனவாகவே போயிருக்கிறது. அந்த வகையில் ரஜினியை பற்றி பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் ஒரு கனவு வைத்திருந்தாராம்.

இதைப்பற்றி ரஜினியின் சாயலிலேயே இருக்கும் ரஜினி சோமு என்பவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இவர் பல மேடைகளில் ரஜினி மாதிரி கெட்டப் போட்டு நடிக்க கூடியவர். சமீபகாலமாக பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அவர் ஒரு சமயம் நடிகர் கிங்காங்கை சந்தித்து நேர்காணல் நடத்தினாராம். அந்த நேரத்தில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய விருதை கிங் காங் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்ட சமயம் .

அந்த நேர்காணலில் கிங்காங் சொன்னது என்னவெனில் ஜனாதிபதியிடமிருந்து நான் விருது வாங்கி விட்டேன். இந்த விருதை ரஜினி சாரிடம் கொடுத்து அவர் கையால் வாங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என அந்த நேர்காணலில் கூறியிருந்தாராம். இதில் ரஜினியை பற்றி சொன்ன இந்த ஒரு விஷயத்தை மட்டும் கட் செய்து ரஜினி சோமு அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து விட்டாராம்.

அதை பார்த்ததும் ரஜினி நேரடியாக கிங்காங்கை தொலைபேசியில் அழைத்து நீங்கள் சொன்ன வீடியோவை பார்த்தேன். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் இப்பொழுது ஊரில் இல்லை .ஊருக்கு வந்த பிறகு அடுத்த மாதத்தில் ஒரு தேதியில் உங்களை நான் சந்திக்கிறேன் எனக் கூறி கிங்காங்கிற்க்கு சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் ரஜினி. ஆனால் அது நடந்ததா இல்லையா என்பது பற்றி ரஜினி சோமு தெரிவிக்கவில்லை.

Next Story